வயிற்று புண்களை தடம்தெரியாமல் ஆக்கும் பழம்.. உங்க வீட்டுல இருந்தால் நீங்களே அதிர்ஷ்டசாலி
மணமணக்கும் வாசனையுடனும், நாள்ப்பட்ட நோய்களுக்கு மருந்தாகவும் இருக்கும் சீதாபழங்களை நாட்டு புறங்களை அதிகமாக பார்க்கலாம்.
கடைகளில் விற்பனை செய்யும் பழங்களை விட மரத்தில் பழமாகிய சீதாப்பழங்கள் சாப்பிடுவதற்கு அவ்வளவு சுவையாக இருக்கும்.
அந்த மரத்தின் பழம் மட்டுமல்ல இலையும் ஏகப்பட்ட நோய்களுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.
வைட்டமின் B, C, மக்னீசியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, ஊட்டச்சத்தும், கனிமச்சத்து ஆகியன சத்துக்கள் சீதாப்பழத்தில் அதிகமாக உள்ளது.
உதாரணமாக, 100 கிராம் சீத்தாபழத்தில் 94 கலோரிகள் இருக்கிறது.
இவ்வளவு பலன்களை அள்ளிக் கொடுக்கும் சீதாப்பழங்கள் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள் கிடைக்கிறது என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.

அனீமியா பிரச்சனை
- அனீமியா பிரச்சனை உள்ளவர்கள் சீதாபழம் சாப்பிடலாம். இதில் மஞ்சள் கலந்து சாப்பிடும் பொழுது கொலஸ்ட்ரால் உடலில் தங்காமல் போவதற்கும் வாய்ப்பு உள்ளது.
நாள்ப்பட்ட நோய்கள்
- மோசமாக உணவு பழக்கங்கள் காரணமாக நாள்ப்பட்ட நோய்களால் அவதிப்படுபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. உதாரணமாக மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோய்களுக்கு சீதாப்பழம் மருந்தாக உள்ளது. ஏனெனின் சீதாப்பழத்தில் ஆண்டி ஆக்சிடென்ட்கள் அதிகமாக உள்ளது. அத்துடன் குடலில் உள்ள நச்சுக்களையும், கழிவுகளையும் இலகுவாக வெளியேற்றும்.

முழங்கால்கள் வலு கொடுக்கும்
- சீதாப்பழங்கள் சாப்பிடும் ஒருவரின் முழங்கால்கள் உறுதியாக்கப்படுகிறது என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மக்னீசிய சத்து நிறைந்திருக்கும் சீதாப்பழத்தில் அமிவங்களின் சேர்க்கையால் இந்த வலு கிடைக்கிறது.
அல்சர் பிரச்சினையுள்ளவர்கள்
- அசிடிட்டி, அல்சர் போன்ற பிரச்சினையுள்ளவர்கள் சீதாப்பழம் சாப்பிடலாம். காலையில் வெறும் வயிற்றில் இருக்கும் சமயத்தில் சீதாப்பழம் எடுத்துக் கொண்டால் அமிலத்தன்மை குறையும். வயிற்றில் உள்ள புண்களுக்கும் விடிவு காலம் வரும். சிறிதளவு வெந்தயத்துடன், சீதா பழம் சேர்த்து சாப்பிட்டால் குடல் புண்கள் தடம் தெரியாமல் மறையும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |