காபி இல்லாமல் வாழ முடியாத ஆளா நீங்க? இந்த பதிவு உங்களுக்கு தான்
பெரும்பாலான நபர்களுக்கு காபி குடிக்கும் பழக்கம் இருக்கும், காபி குடிக்காம நாளே விடியாது என சொல்லும் நபர்கள் தாங்க அதிகம், இப்படி உலகம் முழுவதும் காபி பிரியர்கள் அதிகம்.
இதற்கு மிக முக்கிய காரணம் காபி குடித்தவுடன் உடலுக்கு கிடைக்கும் புத்துணர்வு தான்.
காபீன் எனும் வேதிப்பொருள்
அப்படி காபில என்னதாங்க இருக்கு? காபியில் இருக்கும் காபீன் எனும் வேதிப்பொருள் தான் இரத்தத்தில் ஆண்டிஆக்ஸிடண்ட்களை அதிகரித்து காபியை குடித்தவுடனேயே உடனடியாக இரத்த செல்களுக்கு புத்துணர்வு வழங்கி நமது மூளையில் சுறுசுறுப்பு உணர்வை தூண்டுகின்றது.
காபியில் இருக்கும் காபீன் உடலுக்கு பாதகமான விளைவை ஏற்படுத்துமா? இதை எந்தளவு பயன்படுத்தலாம் என பலருக்கும் சந்தேகம் இருக்கும் .
மனிதர்களை பொருத்தவரையில் காபி அளவாக குடிக்கும் வரை உடலுக்கு நல்ல பயன் தான் கிடைக்கிறது.
உதாரணமாக வேறு எந்தவிதமான உடல் பிரச்சினைகளும் இல்லாத நபராக இருந்தால் நாளொன்றுக்கு 2 தொடக்கம் 3 காபிகள் வரை தாராளமாக குடிக்கலாம்.
காபியில் அடங்கியுள்ள ஆண்டிஆக்ஸிடண்ட் நரம்பியல் சம்பந்தமான நோய்கள் வருவதை கட்டுப்படுத்துவதாகவும் மாரடைப்பு மற்றும் புற்றுநோய் அபாயத்தை குறைப்பதாகவும் அமெரிக்க ஆய்வு தகவல்கள் குறிப்பிடுகின்றன . காபியை அளவுடன் தினசரி எடுத்துக்கொள்வது உடல் நலத்துக்கு எதுவித பாதிப்பையும் ஏற்படுத்தாது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |