பெருங்குடல் அழற்சிக்கு உடனடி நிவாரணம் தரும் தேங்காய் பால்- யாரெல்லாம் சாப்பிடலாம் தெரியுமா?
பொதுவாக விலங்குகளிலிருந்து பெரும் பாலை விட தாவரங்களிலிருந்து பெறும் பால் அதிக ஊட்டச்சத்துக்கள் கொண்டவையாக இருக்கும்.
அந்த வகையில் தேங்காயை உடைத்து அதனை துருவி பிழிந்தால் தேங்காய் பால் வரும். இது உடல் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவியாக இருக்கிறது. தேங்காய்ப் பாலில் வைட்டமின்கள் சி, இ, கே, பி1, பி2, பி3, , பி5, பி6 மற்றும் கால்சியம், தாமிரம், இரும்பு, மக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம் உள்ளிட்ட தாது உப்புகளும் உள்ளன.
அத்துடன் கார்போஹைட்ரேட், புரோட்டீன், நார்ச்சத்து, இயற்கை சர்க்கரை உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களும் உள்ளன.
இவ்வளவு ஊட்டசத்துக்கள் கொண்ட தேங்காய்பாலை உணவுடன் சேர்த்து கொள்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேங்காய் பால் தரும் ஆரோக்கிய பலன்கள்
1. பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகளை எதிர்த்து போராடும் சக்தி தேங்காய் பாலுக்கு இருக்கின்றது. ஏனெனின் மனிதர்களின் தாய்ப்பாலில் இருக்கும் கொழுப்பான லாரிக் அமிலம் தேங்காய் பாலிலும் இருக்கின்றது.
2. லாரிக் அமிலம் மூளை மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான ஊட்டசத்துக்கள் தேங்காய் பாலில் இருக்கிறது. மேலும் எலும்பு அழற்சித்தன்மை வாதம், எலும்புப்புரை, வீக்கம், எலும்பு முறிவு உள்ளிட்ட நோய்கள் வராமல் எம்மை காத்துக் கொள்ளவும் தேங்காய் பால் உதவுகிறது.
3. தேங்காய்ப் பாலில் இருக்கும் லாரிக் அமிலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைத்து உடலை ஒல்லியாக்க உதவும். டயட் பிளானில் இருப்பவர்கள் தேங்காய் பால் எடுத்து கொள்ளலாம்.
4. பெருங்குடல் அழற்சி, மாரடைப்பு, பக்கவாதம் போன்ற நோயுள்ளவர்கள் தேங்காய் பால் தாராளமாக சாப்பிடலாம்.
5. இதய நோயாளிகள் தேங்காய் பால் கலந்த உணவுகளை சாப்பிடும் பொழுது அதிலுள்ள தாது மற்றும் உப்புகள் நரம்பு மண்டலத்தின் செயல்பாடுகளை சீர்ப்படுத்தி தசைப்பிடிப்பு, பதற்றம் மற்றும் மன அழுத்தம் போன்ற நோய்கள் வராமல் காத்துக் கொள்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |