நீரிழிவு நோயால் அவதிப்படுறீங்களா? கிராம்பு தண்ணீர் கட்டாயம் எடுத்துக்கோங்க
கிராம்பு தண்ணீரை பருகுவதன் மூலம் கிடைக்கும் நன்மையினை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
கிராம்பு தண்ணீர்
பொதுவாக கிராம்பு பல மருத்துவ குணங்கள் நிறைந்த, நறுமணம் மிக்க பொருளாகும். இதனை சமையலுக்கு மட்டுமின்றி, உடல் ஆரோக்கியம், மருத்துவ துறையிலும் அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
கிராம்பு பல வகைகளில் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. அதில் ஒன்று தான் கிராம்பு தண்ணீர். கிராம்பை தண்ணீரும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கின்றது.
இதிலுள்ள யூஜெனால் போன்ற கூறுகள் செரிமானத்தை மேம்படுத்துவதுடன், தூக்கத்தை ஊக்குவித்து உடம்பை வலுப்படுத்துகின்றது.

கிராம்பு நீர் எவ்வாறு தயாரிப்பது?
பாத்திரம் ஒன்றில் தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் கிராம்புகளை சேர்த்து 7 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க வைக்கவும்.
பின்பு அடுப்பை அணைத்து சிறிது நேரம் ஆறவிட்டு, வடிகட்டவும். இதனை தூங்கும் முன்பு வெதுவெதுப்பான சூட்டில் குடிக்க வேண்டும்.
இதனை சுவையை மேலும் அதிகரிக்க சிறிது எலுமிச்சை அல்லது தேன் கலந்து பருகலாம்.

நன்மைகள் என்ன?
உயர் ரத்த சர்க்கரை அளவு பிரச்சனைக்கு கிராம்பு நீர் நல்லதொரு தீர்வை கொடுக்கின்றது. இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துவதுடன், சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கின்றது.
தூங்கும் முன்பு கிராம்பு நீர் குடிப்பதால் வயிற்றில் உள்ள நொதிகளை செயல்படுத்துவதுடன், இரவு முழுவதும் வயிறு தொடர்பான பிரச்சனை இல்லாமல் செரிமான செயல்பாட்டை மேம்படுத்தி நல்ல தூக்கத்தை கொடுக்கின்றது.
இரவு தூங்குவதில் சிக்கல் இருப்பவர்கள் கிராம்பு தண்ணீரை குடித்துவிட்டு தூங்கினால், தூக்கமின்மையை நீக்கும். மன அழுத்தத்தை குறைப்பதுடன், மனம் மற்றும் உடலையும் தளர்த்துகின்றது.

அடிக்கடி நோயினால் பாதிக்கப்படுபவர்கள் கிராம்பு தண்ணீரை பருகுவதன் மூலமாக நோய் எதிர்ப்பு சக்தி வலுவடைவதுடன், உடலில் தொற்றுக்கள் ஏற்படாமலும், பருக கால நோயிலிருந்தும் பாதுகாக்கின்றது.
வாயில் ஏற்படும் துர்நாற்றம், ஈறு பிரச்சனை இவற்றிற்கும் கிராம்பு நீர் சிறந்ததாக இருக்கின்றது. ஏனெனில் பாக்டீரியாவைக் கொல்வதில் பயனுள்ளதாக இருக்கின்றது.
கிராம்பில் உள்ள யூஜெனால் கலவை வீக்கத்தை குறைப்பதுடன், லேசான மூட்டு வலி மற்றும் வீக்கத்தையும் குறைக்கின்றது.

யாரெல்லாம் குடிக்கக்கூடாது?
கிராம்பு தண்ணீரை அதிக சர்க்கரை அல்லது இனிப்புடன் சேர்த்து சாப்பிட வேண்டாம்.
அதே போன்று ரத்த உறைவு பிரச்சனை, குறைந்த ரத்த சர்க்கரை உள்ளவர்கள், ரத்தத்தினை மெலிதாக்கும் மருந்துகளை எடுப்பவர்கள் மருத்துவ ஆலோசனைக்கு பின்பே அதனை குடிக்கவும்.
அதே போன்று கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்களும் மருத்துவரை அணுகிய பின்பே குடிக்கவும்.
ஒவ்வாமை அல்லது வயிற்று வலி ஏற்பட்டால் கிராம்பு நீரை குடிப்பதை நிறுத்தவும்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |