முடி காடு மாதிரி அடர்த்தியாக வளரனுமா? கூந்தலில் இதை கொஞ்சம் தடவுங்க....!
வறண்ட கூந்தல் உடையவர்கள் தயிரை கூந்தலில் தடவினால் நல்ல பயன் பெறலாம்.
ஆனால் தயிரை எப்போது, எவ்வளவு நேரம் தலைமுடியில் தடவ வேண்டும் என்பது முக்கியமான விஷயம்.
தயிரை எவ்வளவு நேரம் தலை முடியில் வைத்திருக்கலாம்
தயிரை 30 நிமிடங்கள் முடியில் தடவினால் போதும், தயிரின் பலன்கள் குறைந்த நேரத்திலேயே தெரிந்துவிடும்.
எனவே, நீண்ட நேரம் தடவினால்தான் அதிக பலன் கிடைக்கும் என்பது தவறான நம்பிக்கை.
தலையில் தயிரைப் பூசி அரை மணி நேரம் ஊறவிட்டு, அதன்பிறகு சாதாரண நீரில் முடியைக் கழுவினால் போதும்.
குறைந்தது வாரத்திற்கு ஒருமுறை தயிரை தலைமுடியில் தடவி வந்தால், முடி பளபளப்பாக இருப்பதோடு, வளர்ச்சியும் அதிகரிக்கும்.
தலைமுடி மிகவும் வறண்டு இருப்பவர்கள் கண்டிப்பாக தயிரை சாப்பிட வேண்டும். அதோடு, வாரம் இருமுறை தலைக்கு தயிர் ட்ரீட்மெண்ட் கொடுக்க வேண்டும்.
இதை தொடர்ந்து செய்துவந்தால், தலைமுடி அழகாக மாறுவதோடு, உடல் சருமமும் அழகாக மாறும்.
தலைமுடி வளர்ச்சியை துரிதப்படுத்திலும் தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது.
வாரம் ஒருமுறை தயிரை தலையில் தடவி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
பொடுகு பிரச்சனைக்கும் தயிர் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
தலையில் பொடுகு அதிகமாக இருந்தால் கண்டிப்பாக தயிரை தலையில் தடவி அரை மணி நேரம் கழித்து கழுவுவது நல்ல பலனளிக்கும். நரைமுடி பிரச்சனைக்கும் தயிர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இளநரையால் முடி வெள்ளையாக மாறுபவர்களும், தயிரை பேஸ்டைப்போல தலையில் தடவி, சிறிது நேரம் ஊறவிட்டு கழுவலாம்.
தயிரில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உணவாக உடலுக்குள் வேலை செய்தால், தலையில் போடப்படும் தயிர் வெளிப்புறமிருந்து வேலை செய்து அழகை மேம்படுத்தும்.