நெல்லிக்காய் சாற்றுடன் சீரகமும் கலந்த தண்ணீரை குடிச்சு பாருங்க! அந்த அற்புத நன்மைகள் கிடைக்கும்
பொதுவாக தனித்தனியே பெரிய நெல்லிக்காயும் சீரகமும் சக்தி வாய்ந்த சமையல் பொருட்கள் தான் என்று நம் எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் இவை இரண்டும் சேர்த்து தயாரிக்கப்பட்ட இந்த ஆரோக்கிய பானம் பல நன்மைகளை கொண்டது என்று சொல்லப்படுகின்றது.
தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
பெரிய நெல்லி
பெரிய நெல்லிக்காயை அப்படியே சாப்பிட்டாலும், அரைத்து சாறு எடுத்து குடித்தாலும் அல்லது பொடியாக சாப்பிட்டாலும் என்று எப்படி சாப்பிட்டாலும் நமக்கு அளப்பரிய நன்மைகளையே செய்கிறது. அதில் அதிக அளவில் இருக்கும் வைட்டமின் சி நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பாக்டீரியா தொற்றுகள் நம்மை அண்டாதவாறு பாதுகாக்கின்றன.
பெரிய நெல்லிக்காய் சாற்றுடன் தண்ணீர் சேர்த்து வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். இப்படி குடிப்பதால் உடல் சுத்தமாவது மட்டுமல்லாமல் உணவும் நன்றாக செரிமானம் ஆகும். தோலும் மினுமினுக்கும். கூடவே உடல் எடையும் குறையும்.
பெரிய நெல்லிக்காயில் உள்ள அமினோ அமிலங்கள் முடி கொட்டுவதை கட்டுப்படுத்துகிறது, முடி வளர்ச்சிக்கு உதவுகிறது மற்றும் இன்னும் பல்வேறு நன்மைகளை புரிகிறது.
சீரகம்
வளர்சிதை மாற்றத்தை வேகப்படுத்துகிறது. அது மட்டுமல்ல சீரகம் சில நொதிகளை உற்பத்தி செய்கிறது .அவை செரிமானத்துக்கு துணை புரிந்து உடல் எடை குறைப்பிற்கு வழி வகுக்கிறது.
நீங்கள் குடல் எரிச்சல் நோயால் அவதிப்படுகிறீர்கள் என்றால் மற்றும் வயிறு உப்புசம் , அமிலத்தன்மை, வாய்வு மற்றும் ஏப்பம் போன்ற அறிகுறிகள் கொண்டவர்கள் என்றால் சீரகத்தை உங்கள் உணவில் சேர்த்து கொள்ளுங்கள். இது உடலுக்கு நன்மை புரியும் .
உங்கள் தோலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். சீரகத்திலுள்ள தைமோகுவினோன் (thymoquinone) கல்லீரலை பாதுகாக்கிறது மற்றும் வீக்கங்களை தடுக்கிறது. உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்கிறதென்றால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
எப்படி எடுத்து கொள்ளலாம்?
ஒரு டம்ளர் தண்ணீரில் நீர்த்த பெரிய நெல்லிக்காய் சாற்றையும் , இரவு ஊற வைத்த சீரகத்தையும் சேர்த்து குடிக்கவும். எனினும் இதை வெறும் வயிற்றில் குடிப்பதால் நினைத்துப் பார்க்க முடியாத அளவு நன்மைகளை பெற முடியும். இந்த தண்ணீரை தினமும் பருகுங்கள். நிறைய பயன்களை நீங்கள் அடைவீர்கள்.