ஒட்டுமொத்த கூந்தல் பிரச்சினைக்கும் தீர்வு வேண்டுமா? இந்த இலை ஒன்னு போதும்
பொதுவாகவே அடர்த்தியான, உறுதியான கூந்தலைப் பெறுவதற்கான ஆசை எல்லோருக்கும் இருக்கின்றது.
ஆனால் பல பெண்களுக்கு முடி உதிர்தல், வறண்ட முடி போன்ற பல பிரச்சினைகள் இருக்கும்.
தற்காலத்தில் சுற்றுச்சூழல் மாசு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றுடன் சந்தைகளில் அதிகளவில் பெருகிப்போன இரசாயணம் கலந்த கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவது போன்ற காரணங்களினால் கூந்தல் உதிர்வு மற்றும் கூந்தல் வலுவிலக்கும் பிரச்சினைகள் அதிகமாகிவிட்டது.
அதனை வீட்டில் இயற்கையாக கிடைக்ககும் பொருட்களுள் ஒன்றான கற்றாழையை வைத்தே கூந்தல் தொடர்பான பிரச்சினைகளுக்கு எவ்வாறு முடிவுக்கட்டுவது என இந்த பதிவில் பார்க்கலாம்.
கற்றாழையின் நன்மைகள்
கற்றாழை ஜெல்லில் வைட்டமின்களும் அமினோ அமிலங்களும் அதிகளவில் நிறைந்துள்ளது. இதனால் இது கூந்தல் உதிர்வை தடுப்பதுடன் கூந்தலை மென்மையாகவும், பளபளப்பாகவும் வைத்திருப்பதில் பெரும் பங்காற்றுகின்றது.
வீட்டில் கற்றாழை செடி இருந்தால் அதிலிருக்கும் கற்றாழையையும் அதன் சாற்றினையும் எடுத்துக்கொள்ளலாம். அப்படி இல்லையென்றால் கடையில் இருந்து சுத்தமான கற்றாழை ஜெல்லை வாங்கிப்பயன்படுத்தலாம்.
அவ்வப்போது வீட்டில் இயற்கையான முறையில் கிடைக்கும் கற்றாழை சிறந்த பயனை கொடுக்கும். கற்றாலை ஜெல்லை ஈரமான கூந்தலில் தான் தடவ வேண்டும்.
உங்கள் விரல்கள் அல்லது ஏதேனும் பிரஷ்ஷினை வைத்து நேரடியாக கற்றாழை சாற்றினை உங்கள் உச்சந்தலையில் தடவலாம்.
முடி அதிகளவில் உதிர்ந்து காணப்படும் பகுதியில் கற்றாழையின் ஜெல்லை தடவி மசாஜ் செய்து வந்தால், கற்றாழையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் நொதிகளானது பாதிப்படைந்த கூந்தலை புதுப்பித்து, முடியின் வளர்ச்சியை அவ்விடத்தில் தூண்டும்.
எனவே முடி அதிகம் உதிரும் போது, கற்றாழையின் ஜெல்லை ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்வது, முடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.
கற்றாழை ஜெல்லை ஒரு சிறந்த ஹேர் கண்டிஷனர் என்று சொல்லலாம். ஏனெனில் இதனை கூந்தல் பராமரிப்பில் பயன்படுத்தினால், அவை கூந்தலை பட்டுப்போன்று மென்மையாக வைத்துக் கொள்ளும்.
அதற்கு கற்றாழை ஜெல்லில் முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து நன்கு கலந்து, கூந்தலில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால் வறண்ட கூந்தலுக்கு எளிதில் முடிவுக்கட்டிவிடலாம்.
கற்றாழை ஜெல்லை அன்றாடம் பயன்படுத்தும் எண்ணெயுடன் கலந்தும் பயன்படுத்தவாம். இவ்வாறு தினசரி பயன்படுத்திவர கூந்தல் உதிர்வு வறண்ட கூந்தல் வலுவிலந்த கூந்தல் ஆகிய பிரச்சினைகளுக்கு மிகச் சிறந்த தீர்வாக அமையும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW |