மாம்பழம் சாப்பிட்டால் தீங்கு ஏற்படுமா? தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்
இயற்கை மற்றும் செயற்கை முறையில் பழுத்த மாம்பழங்களை எளிதாக கண்டுபிடிக்க சில டிப்ஸ்களை இங்கு தெரிந்து கொள்வோம்.
மாம்பழம்
முக்கனிகளில் ஒன்றாக இருக்கும் மாம்பழத்தை பழங்களின் ராஜா என்றும் கூட அழைப்பார்கள். கோடை காலத்தில் மாம்பழத்தை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் இன்று ரசாயனங்கள் தெளித்து பழுக்க வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.
இவை உடம்பில் பல பிரச்சினைகளை ஏற்படுத்த வழிவகுக்கின்றது. இதனால் பெரும்பாலான மக்கள் மாம்பழத்தை வாங்கி சாப்பிடுவதையே தவிர்கின்றனர்.
இங்கு மாம்பழத்தை உண்மையான மற்றும் போலி எவை என்பதை எவ்வாறு கண்டுபிடிக்கலாம் என்பதை பார்க்கலாம்.
கலப்பட மாம்பழத்தை கண்டறிய
இயற்கை முறையில் பழுக்க வைக்கப்படும் மாம்பழத்தில் அனைத்து இடங்களும் ஒரே சீரான மஞ்சள் நிறம் காணப்படும். ஆனால் செயற்கை முறையில் பழுக்கும் மாம்பழம் ஆங்காங்கே பச்சை நிறத்தில் காணப்படும்.
செயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தில் சாறு குறைவாக தான் இருக்கும். ஆனால் இயற்கையாக பழுக்க வைக்கப்பட்ட பழத்தில் சாறு அதிகமாகவே இருக்கும்.
மேலும் மாம்பழத்தை வாங்கி தண்ணீரில் போட்டு பார்த்தால் மேலே மிதந்து வந்தால், செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டது என்றும் தண்ணீர் அடியில் சென்றுவிட்டால் இயற்கை மாம்பழம் என்றும் கண்டுபிடித்துவிடலாம்.
மாம்பழத்தை சற்று அமுக்கி பார்த்தால் மென்மையாக இருந்தால் இயற்கையாக பழுக்க வைக்கப்பட்டதாகும். அதுவே சற்று கடினமாக இருந்தால் அவை செயற்கையாக பழுக்க வைக்கப்பட்டதாகும்.
செயற்கையாக பழுத்த மாம்பழத்தினை சாப்பிடும் போது வாய் மற்றும் உதட்டில் எரிச்சல் ஏற்படும் என்பதையும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
தீமைகள் என்ன?
ரசாயன முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழத்தினை சாப்பிட்டால் பல பிரச்சினைகள் ஏற்படும். வயிறு வலி, தலைவலி, வாந்தி போன்ற பிரச்சினையுடன், கண் பார்வையும் பெரிதும் பாதிக்குமாம்.
ஹார்மோன் மாற்றங்களும் ஏற்படும். ஹைபோ தைராய்டு, நீரிழிவு, கர்ப்பப்பை பிரச்சனை, புற்று நோய் போன்ற கடுமையான நோயும் ஏற்பட வாய்ப்புள்ளது.
தாய்ப்பால் கொடுப்பவர்கள் இந்த மாம்பழத்தை சாப்பிடவே கூடாது. இது குழந்தையின் உடல்நிலையை மோசமாக பாதிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |