எலுமிச்சை மிளகு டீ-யை அடிக்கடி பருகுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்.. எப்படி செய்வது?
ஆரோக்கியத்திற்காக நாம் அனைவரும் மூலிகைத் தேநீரை பருகுவோம். இதில் இஞ்சி, துளசி, புதினா, மிளகு மற்றும் இலவங்கப்பட்டை மிகவும் ஆரோக்கியமானவை.
எந்தவொரு நோய்க்கும் எதிராகப் போராட உகந்தவை. இது கீல்வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூட்டு வலிகளைக் குறைப்பதற்கும் சிறந்தது என்றும் கூறப்படுகிறது. தேவையான பொருட்கள் எலுமிச்சை சாறு - 1 பழத்தினுடையது மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி மிளகு - 1/4 தேக்கரண்டி தேன் - 1 1/2 தேக்கரண்டி செய்முறை: 2 கப் தண்ணீரை அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க விடவும்.
தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் மிளகு மற்றும் மஞ்சள் தூளை போட்டு நன்றாக கொதிக்க விடவும்.
பின்னர் அதை வடிகட்டி அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் விட்டு குடிக்கலாம்.