உங்க தலைமுடியில் பல்லி விழுந்ததா? சாஸ்த்திரம் கூறுவது இதுதான்
வீட்டில் சுற்றித்திரியும் பல்லி சில சமயங்களில் தலை மற்றும் உடலின் மேல் விழ வாய்ப்பு உள்ளது.
அப்படி விழுந்தால் அதற்கு ஒரு ஜோதிட பலன் உள்ளது என சாஸ்த்திரங்கள் கூறுகின்றன.
எதிர்காலத்தில் வரவிருக்கும் பிரச்சினைகளை முன்னரே அறியத்தரும் சந்தர்ப்பமாக சிலர் பார்க்கிறார்கள். இதனை முன்னோர் பரம்பரை பரம்பரையாக பின்பற்றி வருகிறார்கள்.
இன்னும் சிலர் பல்லி விழுந்து விட்டால் உடனே கோயிலில் சென்று பரிகாரம் செய்வார்கள். கெட்ட சகுனத்தின் மறு உருவமாக பார்க்கப்படும் பல்லியை சில நாடுகளில் உணவாக எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால் இப்படி சகுனங்கள் பார்ப்பதற்கு எந்தவித அறிவியல் காரணங்களும் இல்லை.
அந்த வகையில், பல்லி தலை மற்றும் உடலில் விழுந்து விட்டால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பதை சாஸ்த்திரங்களை அடிப்படையாக வைத்து பார்க்கலாம்.

1. தலையில் விழுந்தால்
பல்லி தலையில் விழுந்தால் அது கெட்ட சகுனமாக பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் வரவிருக்கும் துன்பங்கள், குடும்ப பிரச்சினைகள், உறவுக்குள் விரிசல் மற்றும் உறவினர்களின் மரணம் ஆகியவற்றை குறிக்கிறது என சாஸ்த்திரங்கள் கூறுகிறது.
2. நெற்றி பல்லி விழுதல்
நீங்கள் படுத்திருக்கும் சமயத்தில் உங்கள் நெற்றியிலும் பல்லி விழுந்தால் அது நல்ல சகுனமாக பார்க்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக இடது பக்கம் உள்ள நெற்றியில் விழுந்தால் உங்களுக்கு புகழ் கிடைக்கும். அதே போன்று வலது பக்கம் உள்ள நெற்றியில் விழுந்தால் செல்வம் இருப்பதற்கு மேல் இன்னும் அதிகரிக்கும்.

3. தலை முடியில் விழுந்தால்
நாம் நடந்து செல்லும் பொழுது பல்லி தலையில் பட்டு தலைமுடியில் விழுந்தாலும், அல்லது நேரடியாக தலைமுடியில் விழுந்தாலும் நல்ல பலன்கள் கிடைக்கும். இந்த சம்பவம் அநேகமாக பெண்களுக்கு தான் நடக்கும். எதிர்காலம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும் என்பதை இந்த சம்பவம் உணர்த்துகிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |