CM VIJAY - காக இந்த பணம்... யாசகம் பெற்றே தமிழக அரசுக்கு 1.6 கோடி கொடுத்த முதியவர்!
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில், யாசகர் பூல் பாண்டியன் தற்போது ரூ10,000 முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
குறித்த முதியவர் யாசகம் பெற்று தமிழ்நாடு அரசுக்கு இதுவரையில் சுமார் ரூ.1 கோடி ரூபாய்க்கு மேல் நிதியுதவி செய்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணற்றைச் சேர்ந்த யாசகர் பூல் பாண்டியன், தனக்கென்று எதையும் சேமிக்காமல், கோயில்கள் மற்றும் பொதுமக்களிடம் யாசகம் பெறும் பணத்தில் பல ஆண்டுகளாகத் தமிழக அரசுக்குத் தொடர்ந்து நிதி வழங்கி வருகிறார்.
யாசகர் பூல் பாண்டியன்
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகாவின் ஆங்கினார் கிராமத்த்தை சேர்ந்தவர் 75 வயதான பூல் பாண்டியன். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருக்கின்றார்கள்.
மும்பையில் பணியாற்றிய இவர், குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்து தனது இல்லற கடமைகளை முடித்த பின்னர், அவரது மனைவியும் இறந்து விட்டார்.

மனைவி இறந்ததை தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறி யாசகம் பெற்று வாழ்க்கையை நடத்த முடிவு செய்த இவர், யாசகம் மூலம் கிடைத்த பணத்தை வைத்து சுமார் 40 அரசு பள்ளிகளுக்கு நாற்காலி, விளையாட்டு உபகரணங்கள் குடிநீர் இயந்திரங்கள் போன்றவற்றை வாங்கிக்கொடுத்துள்ளார்.
மேலும் கொரோனா காலத்தில் மதுரையில் இருந்த இவர், யாசகம் பெற்றே மாதம்தோறும் கொரோனா நிவாரண நிதியாக ரூ.10,000 மதுரை மாவட்ட ஆட்சியாளரிடம் வழங்கினார்.இவ்வாறாக 10 மாதங்களில் ரூ.1 லட்சம் வழங்கியிருந்தார்.

அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், சுதந்திர தினவிழாவில் அவருக்கு சிறப்பு விருது வழங்கி கவுரவித்தார். யாசகர் ஒருவர், இதுபோன்ற அரசு விழாவில் கவுரவிக்கப்பட்டது அதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
அது மாத்திரமன்றி கள்ளக்குறிச்சி தவிர்த்து தமிழ்நாட்டின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடமும் நிவராண நிதி வழங்கியுள்ளார்.

கொரோனா நிவாரண நிதி, வெள்ள நிவாரண நிதி, இலங்கை தமிழர் நிவாரண நிதி என தமிழக அரசுக்கு இதுவரை சுமார் ரூ.1.60 கோடி வழங்கி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றுள்ள நிலையில் இறுதியாக கடந்த மே 19 ஆம் திகதி ரூ10,000 முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |