உங்களுக்கு அதிர்ஷ்டம் பெருகனுமா? தூங்கும் முன்பு இதை செய்திடுங்க
இரவில் தூங்குவதற்கு முன்பு நாம் செய்யும் சில காரியங்கள் நமக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும் என்பதை இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
நபர் ஒருவரின் வீழ்ச்சிக்கும், அதிர்ஷ்டத்துக்கும் ஜோதிடம் முக்கியமாக காணப்படுகின்றது. அந்த வகையில் சில காரியங்களை இரவில் செய்துவிட்டு படுத்தால் அதிர்ஷ்டம் பெரும் என்பது ஐதிகம்.
இரவில் செய்ய வேண்டியது என்ன?
இரவில் சமையலறையை சுத்தம் செய்த பின் தூங்க செல்வது மங்களகரமானதாக பார்க்கப்படுகின்றது. வீட்டின் சமையலறை அழுக்காகவும், பாத்திரம் அங்கும் இங்குமாக இருந்தால் வறுமையை ஏற்படுத்தும்.
எதிர்மறை ஆற்றலை நீக்கி நேர்மறை ஆற்றலை வீட்டிற்கு கொண்டுவருவதில் கற்பூரம் பெரிதும் உதவியாக இருக்கின்றது.
இரவில் தூங்கும் போது கால்கள், வீட்டு வாசலின் எதிரே இல்லாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ளவும்.
தூங்கும் படுக்கை திடமானதாக இருக்க வேண்டுமாம்... அதில் விரிசலோ, பழுதற்றோ இருந்தால் வீட்டில் துரதிர்ஷ்டத்தை கொடுக்கும்.
இரவில் தூங்கும் முன்பு கை மற்றும் கால்களை கழுவிவிட்டு, தண்ணீர் அருந்திவிட்டு தான் தூங்க வேண்டும். அசுத்தமான வாயுடன் தூங்கக்கூடாதாம்.
இரவில் தூங்கும் முன் சாத்விக் மந்திரங்களை உச்சரிக்க வேண்டும் என்று கூறப்படுகின்றது... இதனை மேற்கொள்ளாத நபர்கள் தனது இஷ்ட தெய்வத்தை நினைத்து வணங்கிவிட்டு தூங்க சென்றால் மன அமைதியின்மை நீங்கி நிம்மதி கிடைக்கும்.