மெட்டபாலிசத்தை அதிகரிக்க செய்யும் பீட்ரூட் ரசம்- குழந்தை முதல் அனைவருக்கும் ஒரே ரெசிபி
பொதுவாக பீட்ரூட்டை கோடைக்காலங்களில் சாப்பிடுவதை விட குளிர்காலங்களில் சாப்பிடுவது சிறந்தது.
சிலருக்கு தவறான வாழ்க்கை முறை காரணமாக அல்சர் ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாரத்தில் 3 நாட்கள் பீட்ரூட் ஜூஸில் சிறிதளவு தேன் சேர்த்து கலந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நோய் குணமாகும்.
பீட்ரூட்டில் மிக அதிக அளவில் இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் பி1 இருப்பதால் ரத்தத்திலுள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
அந்த வகையில் உடலிலுள்ள மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் பீட்ரூட்டை வைத்து எப்படி ரசம் செய்வது என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
பீட்ரூட் ரசம்
தேவையான பொருட்கள்
- பீட்ரூட் - 1
- தக்காளி - 1
- சீரகம் - 1 தேக்கரண்டி
- மிளகு - 1/2 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் - 2
- உப்பு - தேவையான அளவு
- தேங்காய் எண்ணெய் - 1தேக்கரண்டி
- கடுகு - 1/4 தேக்கரண்டி
- கறிவேப்பிலை - தேவையான அளவு
ரசம் செய்முறை
ரசத்திற்கு தேவையான பீட்ரூட்களை தோல் நீக்கில் தனியாக நறுக்கி வைக்கவும்.
பின்னர் தக்காளி, பீட்ரூட் துண்டுகள், சீரகம், மிளகு ஆகியவற்றை ஒன்றாக போட்டு அரைக்கவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து மிதமான வெப்பநிலையில் அடுப்பை குறைத்து வைத்து அரைத்த கலவையை உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
2 நிமிடங்களுக்கு பின்னர் வேறொரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை நறுக்கிய வெங்காயம் சேர்த்து தாளிக்கவும்.
தாளிப்பு, மல்லி தழை இரண்டையும் ரசத்தில் போட்டு கிளறி இறக்கினால் சுவையான பீட்ரூட் ரசம் தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |