தினமும் பீட்ருட் ஜூஸ் குடித்து வந்தால் நம் உடலுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கும்ன்னு தெரியுமா?
பீட்ரூட்
பீட்ரூட் இனிப்பு சுவையை உடைய ஒரு காய்கறியாகும். இது கீரை போன்ற காய்கறி குடும்பத்தைச் சார்ந்தது. இவை சிவப்பு அல்லது நாவல் நிறத்தில் இருக்கும். இதனை செங்கிழங்கு, அக்காரக்கிழங்கு என்றும் கூறுவர். ஊட்டச்சத்துக்களின் ஆதாரமாக கருதப்படும் காயான பீட்ரூட் மிகசிறந்த ஆரோக்கியமான வேர் காய்கறியாகும்.
நம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் பீட்ரூட்டை சிலர் சாலட் வடிவில் எடுத்து கொள்கிறார்கள். சிலர் பொரியல் செய்து, மேலும் சிலர் ஜூஸ் ஆக குடித்து வருகின்றனர். பீட்ரூட்டின் சுவை பெரும்பாலானவர்களுக்கு பிடிப்பதில்லை.அதனாலேயே நிறைய மக்கள் பீட்ரூட்டை உணவில் சேர்க்க மறுக்கின்றனர். ஆனால் இந்த பீட்ரூட்டில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.
தினமும் பீட்ருட் ஜூஸ் குடித்து வந்தால் நம் உடலுக்கு எவ்வளவு நன்மை கொடுக்கும் என்று பார்ப்போம் -
புற்றுநோய்க்கு
தினமும் பீட்ருட் ஜூஸ் குடித்து வந்தால், பீட்ரூட்டில் பெட்டான் உள்ளதால், நுரையீரல் மற்றும் தோல் புற்றுநோய்களை தடுக்கும். ரத்தம் அதிகரிக்க தினமும் பீட்ருட் ஜூஸ் குடித்து வந்தால், உடலில் ரத்தம் அதிகரிக்கும்.
மலச்சிக்கலுக்கு
தினமும் பீட்ருட் ஜூஸ் குடித்து வந்தால், பீட்ரூட் மலச்சிக்கலை குணப்படுத்துவதோடு வயிற்றை ஆரோக்கியமாக வைக்க உதவி செய்கிறது.
கெட்ட கொழுப்பை கரைக்க
தினமும் பீட்ருட் ஜூஸ் குடித்து வந்தால், உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து, உடல் எடையை குறைக்க உதவி செய்யும்.
சர்க்கரை நோய்க்கு
தினமும் பீட்ருட் ஜூஸ் குடித்து வந்தால், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும். பீட்ரூட் சாறு உட்கொள்வதால், அதில் உள்ள போஸ்ட்ராண்டியல் உணவுக்குப் பிறகு உயரும் சர்க்கரை அளவு கிளைசீமியாவை கட்டுப்படுத்துகிறது.
இரத்த அழுத்தத்திற்கு
தினமும் பீட்ருட் ஜூஸ் குடித்து வந்தால்,இரத்த அழுத்தத்தை குறைத்து விடும். பீட்ரூட் சாறு 4 வாரங்களில் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு வருகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
எலும்புருக்கி
நோய்க்கு தினமும் பீட்ருட் ஜூஸ் குடித்து வந்தால், பீட்ரூட் ஜூஸ்ஸில் உள்ள நைட்ரேட்டுகள் உடலில் நைட்ரிக் ஆக்சைடாக மாற்றம் அடைந்து, எலும்பு தொடர்பான நோய்களுக்கு தீர்வு அளிக்கும். எலும்புருக்கி நோயிலிருந்து பாதுகாக்கும்.
புத்துணர்ச்சிக்கு
தினமும் பீட்ருட் ஜூஸ் குடித்து வந்தால், உடலுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும்.