வாரத்துக்கு 2 முறை இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... சருமம் ரோஜா பூவுக்கே டஃப் கொடுக்கும்!
பொதுவாகவே ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி தங்களின் முகத்தை அழகுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருப்பது இயல்பு.
குறிப்பாக பெண்கள் தங்களை அழகுப்படுத்திக்கொள்ள எவ்வவு பணத்தையும், நேரத்தையும் வேண்டுமானாலும் செலவிட தயாராக இருப்பார்கள்.
ஆனால் அதற்கேற்ற பலன் கிடைத்தா என்று கேட்டால் கேள்வி குறி தான். பெரும்பாலானவர்கள் பணத்தையும் அதிகமாக செலவு செய்து முகப்பொலிவை பெரும் நோக்கில் அதிகளவில் ரசாயனங்கள் கலந்த அழகுசாதன பொருட்களை பயன்படுத்தி சரும பாதிப்புகளையும் இலவச பரிசாக பெருகின்றார்கள்.
ஆனால் வீட்டிலேயே வெறும் இரண்டே பொருட்களை பயன்படுத்தி 15 நிமிடங்களில் ரோஜா பூ போன்ற மென்மையான பளபளக்கும் சருமத்தை பெற முடியும் என்றால் உங்களால் நட்ப முடிகின்றதா?
ஆம் எந்த வித ரசாயன கலவையும் இல்லாமல் வீட்டிலேயே தயாரிக்க கூடிய பீட்ரூட் ஃபேஸ் பேகின் நன்மைகள், தயாரிக்கும் முறை மற்றும் பயன்படுத்தும் முறை தொடர்பான முழுமையான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
பீட்ரூட் ஃபேஸ் பேக் தயாரிப்பது எப்படி?
பீட்ரூட் ஃபேஸ் பேக் தயார் செய்வதற்கு முதலில் ஒரு கிண்ணத்தில் பீட்ரூட் சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் சிறிதளவு தேனை சேர்த்து, அதை நன்றாக மிக்ஸ் செய்து உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் நன்றாக தடவி விட்டு, அப்படியே 15 நிமிடங்களுக்கு உலர விட வேண்டும்.
பின்னர் குளிந்த நீரை கொண்டு கழுவினால் முகம் உடனடி பொலிவு பெறுவதை கண்கூடாக பாரக்கலாம்.
இளஞ்சிவப்பு மற்றும் பளபளப்பான சருமத்தை இயற்கை முறையில் நிரந்தரமாக பெற இந்த பீட்ரூட் ஃபேஸ் பேக்கை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்துவது சிறந்த பலனை கொடுக்கும்.
நன்மைகள்
அதில் எந்த வித ரசாயனங்களும் கலக்காமல் தயார் செய்த உடனே பயன்படுத்துவதால், சருமத்துக்கு எந்த வித பாதிப்பையோ, பக்கவிளைவுகளையே ஏற்படுத்தாது. மேலும் அதனை செய்து போட்டுவதற்கு செலவும் மிக மிக குறைவு.
முகத்தில் பீட்ரூட் ஃபேஸ் பேக்கைப் தொடர்ந்து பயன்படுத்தும் போது கறைகளைப் போக்கி இது உங்கள் சருமத்திற்கு இளஞ்சிவப்பு நிறப் பளபளப்பைக் கொடுக்கும். கரும்புள்ளிகளையும் முகப்பருக்களால் ஏற்பட்ட வடுக்களையும் விரைவில் மறைய செய்யும்.
முகத்தில் பீட்ரூட் ஃபேஸ் பேக்கைப் பயன்படுத்துவது வறண்ட மற்றும் மந்தமான சருமத்துக்கு ஈரப்பதம் மற்றும் புத்துணர்வை கொடுப்பதுடன் சரும செல்களை புதுப்பித்து சருமத்தை பொலிவாக மாற்றுவதற்கு பெரிதும் துணைப்புரியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |