இரத்தத்தை அதிகரிக்கும் பீட்ரூட் தோசை... எந்த நேரத்தில் சாப்பிட வேண்டும் தெரியுமா?
பொதுவாகவே நம் வீடுகளில் காலை அல்லது இரவு வேளைகளில் தோசைதான் உணவாக இருக்கும். அந்த தோசையில் ஆரோக்கியமான சில பொருட்களை கலந்து சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் உணவாக மாற்றியிருப்பார்கள் இல்லத்தரசிகள்.
அந்தவகையில், இன்று இது நாள்வரையில் செய்திடாத உடலில் இரத்தத்தை அதிகரிக்கும் ஒரு ஆரோக்கியமான உணவின் ரெசிபியைத் தான் பார்க்கப் போகிறோம்.
தேவையான பொருட்கள்
- அரிசி - 3 கப்
- உளுத்தம் பருப்பு - 1 கப்
- பீட்ரூட் - 1
- பேக்கிங் சோடா - 3/4 தேக்கரண்டி
- சீரகம் - 1/2 தேக்கரண்டி
- சிவப்பு மிளகாய் - 2
- அசாஃபோடிடா - 1 சிட்டிகை
- உப்பு,எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை
முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நன்கு கழுவி இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
பின்னர் அடுத்த நாள் இரண்டையும் நன்றாக மிக்சியில் சேர்த்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின் எடுத்துக்கொண்ட பீட்ரூட்டை துண்டு துண்டுகளாக வெட்டி சீரகத்தூள் மற்றும் சிவப்பு மிளகாயுடன் சேர்த்து மிக்சியில் அதிக தண்ணீர் சேர்க்காமல் அரைக்கவும்.
பீட்ரூட் பேஸ்ட் நன்றாக அரைத்தப் பின்னர் முன்னதாக அரைத்து எடுத்துக் கொண்ட அரிசி பருப்பு கலவையை ஒன்றாக கலக்கிக் கொள்ளவும்.
பின்னர் தோசை தவாவை சூடாக்கி அதில் எண்ணெய் தடவி தோசை ஊற்றி எடுத்தால் ஆரோக்கியமான பீட்ரூட் தோசை தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |