ரத்த சோகைக்கு தீர்வு கொடுக்கும் பீட்ரூட் சட்னி: அட்டகாசமான சுவையில் எப்படி செய்வது?
பொதுவாகவே சூப்பர் உணவுகள் வரிசையில் பீட்ரூட் முக்கிய பங்கு வகிக்கின்றது. அதற்கு முக்கிய காரணம் அதில் இருக்கும் மருத்துவ குணங்களும், ஊட்டச்சத்துப் பண்புகளும் தான்.
இருப்பினும் இதன் சுவை பிடிக்காமல் பெரும்பாலானவர்கள் பீட்ரூட்டை தவிர்த்து விடுகின்றனர்.ஆனால், இதை சாப்பிட்டு வந்தால் பல நோய்களுக்கு செலவழிக்கும் பணத்தை மிச்சப்படுத்தலாம் என்பது ஆய்வு தகவல்.
காய்ச்சல், மலச்சிக்கல், செரிமான நோய்கள், ரத்த சோகையை என பலவற்றிற்கு பீட்ரூட் சிறந்த தெரிவாக இருக்கின்றது.குறிப்பாக இது குழந்தைகளுக்கு ஏற்படும் ரத்த சோகையை தடுப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
இத்தனை மருத்துவ குணங்கள் கொண்ட பீட்ரூட்டை வைத்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பும் வகையில் ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் சட்னியை எவ்வாறு செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
எண்ணெய் - 1தே.கரண்டி
கடலைப் பருப்பு - 1 மேசைக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி
கடுகு - 1 தே.கரண்டி
சீரகம் - 1/2 தே.கரண்டி
வெந்தயம் - 1/2 தே.கரண்டி
வரமிளகாய் - 3
புளி - 1 சிறிதளவு
பீட்ரூட் - 2 (சாதாரண அளவு)
மஞ்சள் தூள் - 1/4 1/2 தே.கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை
முதலில் பீட்ரூட்டை சுத்தம் செய்து தோலை நீக்கி அவற்றை சிறு துண்டுகளாக நறுக்கிக் தனியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் ஆகியவற்றை போட்டு பொறியவிட வேண்டும்.
பின்பு அதனுடன் வரமிளகாய் மற்றும் புளியை சேர்த்து, நன்றாக வறுத்து அதளை ஒரு தட்டில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதே பாத்திரத்தில் இருக்கும் எண்ணெயில் பீட்ரூட்டை, மஞ்சள் தூள் மற்றும் உப்பு ஆகியவற்றை நன்றாக கிளறிவிட்டு, மூடி மிதமான தீயில் 5 நிமிடங்கள் வரையில் பீட்ரூட்டை நன்றாக வேகவிட வேண்டும்.
பீட்ரூட் நன்நாக வெந்ததன் பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு அதனை சிறிது நேரம் ஆறவிட வேண்டும். பின் வறுத்த பொருட்களை ஒரு மிக்சர் ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஆற வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து, நீர் ஊற்றாமல், சற்று கொரகொரவென்று அரைத்து எடுத்தால் அட்டகாசமான சுவையில் ஆரோக்கியம் நிறைந்த பீட்ரூட் சட்னி தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |