உதட்டில் பீட்ரூட் துண்டு தேய்த்தால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா?
சமைத்து சாப்பிடும் காய்கறிகளில் ஒன்றான பீட்ரூட்டை நமது சரும அழகிற்கும் பயன்படுத்தலாம் என்பதை இந்த பதிவில் தெளிவாக பார்க்க முடியும்.
பீட்ரூட்
சிலருக்கு உதடுகள் வறண்டுபோய் காணப்படும். கருமை நிறத்தில் காணப்படும். சில உதடுகளுக்கு ஊட்டச்சத்து குறைவாக காணப்படும். இந்த குறைகளை நிவர்த்தி செய்ய தான் வீட்டில் இலகுவாக கிடைக்கக்கூடிய பீட்ரூட் பயன்படுத்தலாம்.
பீட்ரூட்கள் இளம் சிவப்பு நிறத்தினால் ஆனவை. இந்த நிறம் தான் உதடுகளின் நிறம். உதடுகளில் நீர்தன்மை இல்லாததால் தான் வறண்டு வெடிப்பு வந்துவிடுகிறது. உதட்டை எப்போதுமே ஈரப்பதத்துடன் வைத்து கொள்ளவும் தூண்டுகோலாக பீட்ரூட் அமைகிறது.
இதனால் வைட்டமின் C சத்துக்கள் இந்த காயில் அதிகமாக உள்ளதால், உதடுகளிலுள்ள உதட்டில் படர்ந்திருக்கும் கருமை நிறத்தை போக்குகிறது. உதட்டில் உள்ள கோடுகளை நீக்கி முகத்திற்கு இளமையை வெளிக்கொண்டுவருகிறது.
உதட்டிற்கு தேவையான சத்துக்கள் அனைத்தும் இந்த பீட்ரூட்டில் இருப்பதால் இரவில் உறங்கமுன் பீட்ரூட்சாறுடன் எலுமிச்சைப்பழம் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து உதட்டில் பூசி வர வேண்டும். இதன்மூலம் உதடு ஆரோக்கியமாக இருப்பதுடன் சிறந்த நிறத்தயும் பெறும்.