பகல் நேர தாம்பத்தியத்தில் ஏற்படும் விளைவுகள் என்னென்ன? என்ன செய்யவேண்டும்?
திருமணமான தம்பதியரின் வாழ்வில் ஓர் அங்கம் தான் தாம்பத்தியம் என்றாலும் அது இருவரின் சம்மதத்துடனும் நடக்க வேண்டிய ஒன்று.
அதேவேளையில் இரவில், இருள் சூழ்ந்த இடத்தில் நடப்பதே சரி. பெண்களும்கூட இதைத்தான் விரும்புவார்கள். சாஸ்திரங்களில் கூட பகல் நேர தாம்பத்தியம் கூடாது என்றே சொல்லப்பட்டுள்ளது.
இதையடுத்து, பகல் நேரத்தில் தாம்பத்தியம் கொண்டால் உடலில் சூடு அதிகரித்து ஆண்களுக்கு விந்து நீர்த்துப்போதல், விந்து முந்துதல் உள்ளிட்ட பிரச்சினைகள் வர வாய்ப்பு இருப்பதால் முழுமையாக இன்பம் அனுபவிக்க முடியாது.
இவற்றை அடிப்படையாகக்கொண்டே குளிர்ச்சியான சூழல் உள்ள இரவில் தாம்பத்திய உறவு வைத்துக்கொள்வது நல்லது என கூறுகின்றனர். பொதுவாக இரவு அல்லது அதிகாலை 4 மணிக்கு மேல் காலை 6 மணிக்குள் உறவு வைத்துக் கொள்வது ஏதுவான சூழலாகும்.
வயிற்றில் உணவு இருக்கும் நேரத்தில் உறவு வைத்துக்கொண்டால் உணவு செரிமானமாகாமல் போவதுடன் வேறு சில பிரச்சினைகள் எழும். அதிலும், குறிப்பாக, சாப்பிட்டதும் தாம்பத்தியம் வைத்துக்கொண்டால் மூலக்கோளாறுகள் வர வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.
எனவே, இரவில் படுக்கைக்குச் சென்றதும் சில மணி நேரம் கழித்து உறவு கொள்வதே சரி. மேலும், தாம்பத்தியம் என்பது மனிதன் உள்பட அனைத்து உயிரினங்கள் மத்தியில் இயல்பாக நடக்கும் ஒரு விஷயம்.
இதில் மனித இனத்தில் மட்டுமே பெண்களைவிட ஆண்களே முதலில் தயாராகின்றனர். நேரம், காலம் பார்க்காமல் உறவு கொள்வதில் ஆண்களே ஆர்வம் காட்டுகின்றனர்.
பகலில் உறவு கொள்வதைவிட இரவில் உறவுகொள்வதே நல்லது என்று ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். இரவில் ஆக்சிஜனேற்ற ரத்த ஓட்டம் கிடைக்க வேண்டியது அவசியம்.
அது ஆழ்ந்த உறக்கத்தில்தான் கிடைக்கும். இரவில் எத்தனை முறை உறவு கொண்டாலும் ஆழ்ந்த உறக்கம் வந்துவிடும்.
இதன்மூலம் உடலுறுப்புக்குத் தேவையான அளவு ஆக்சிஜனேற்ற ரத்த ஓட்டம் கிடைத்துவிடும் என்பதால் இரவில் தாம்பத்தியம் வைத்துகொள்வதே உடல்நலத்துக்கும் நல்லது என்று பரிந்துரைக்கப்படுகிறது.