முகம் சும்மா தங்கம் போல மின்னணுமா? இந்த 2 பொருளை காபியுடன் கலந்து தடவினால் போதும்
ஒளிரும் மென்மையான சருமம் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. சருமம் இப்படி வருவதற்காக ஒவ்வொருவரும் பல ஆயிரங்களை செலவு செய்து வருகின்றனர்.
இன்றைய அவசர கால சூழ்நிலையில் நாம் தினம் தினம் வெளியில் செல்ல நேரிடும். இதனால் முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வறட்சி போன்ற பிரச்சனைகள் வருகிறது.
இவை முகத்தின் பொலிவைக் குறைக்கும். இவற்றை நாம் குறைக்க பார்லர் சென்று அதிகளவில் செலவு செய்கிறோம். ஆனால் விட்டில் இருக்கும் காபியை வைத்து நமது அழகை இரட்டிப்பாக்க முடியும்.
காபியுடன் இரண்டு பொருகள் கலந்து அதை அப்படியே நமத சருமத்தில் அப்பிளை செய்து வந்தாலே செலவில்லாமல் முகத்தை பளபளப்பாக்கலாம். இதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
காபி ஃபேஸ் பேக் எப்படி தயாரிப்பது?
முதலில் ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் காபி தூளை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது அதே கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் தயிர் சேர்க்கவும்.
பின்னர் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, மூன்றையும் நன்றாகக் கலந்து, மென்மையான பேஸ்ட் போல தயாரிக்கவும். இப்போது இந்த பேஸ்டை சருமப் பராமரிப்பிற்காக வைத்துக்கொள்ளலாம்.
இந்த பேஸ்ட்டை உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதி முழுவதும் நன்றாக தடவவும். இதை அப்படியே 10 அல்லது 15 நிமிடங்கள் அப்படியே வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் குளிர் நீரில் கழுவலாம். இப்படி செய்து வர வர முகத்தில் ஒரு நல்ல உணர்வை மாற்றத்தை நீங்கள் பெறலாம். ஒரு போதும் சுடு நீரில் கழுவ வேண்டாம்.
இதை வாரத்தில் 3 முறை செய்தால் முகப் பளபளப்பு மேம்படும். மேலும் வறண்ட மற்றும் உயிரற்ற சருமம் மென்மையாக மாறும். காபி, தயிர் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றில் காணப்படும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் உங்கள் சருமத்திற்கு ஒரு சிறந்த அழகூட்டும் பொருள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |