கோடைகாலத்தில் உடலுக்கு சிறந்தது மோரா,தயிரா? அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்
தற்போது அதிகரித்து வரும் வெப்பத்திலிருந்து தப்பிக்க மனிதன் பலவற்றை செய்கிறான். இந்த நேரத்தில் அதிகமானோர் தயிர் சாப்பிடுகிறார்கள், சிலர் மோர் குடிக்க விரும்புகிறார்கள்.
தயிர் அல்லது மோர் எதுவாக இருந்தாலும், இரண்டிலும் காணப்படும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் உடலை குளிர்விக்க உதவியாக இருக்கும்.
கோடையில் தயிர் அல்லது மோர் உட்கொள்வதன் மூலம் உடலில் நீரிழப்பு அபாயத்தை பெருமளவில் குறைக்கலாம். இந்த இரண்டு உணவுகளில் எது ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை தரும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
எது சிறந்தது?
மோரின் நன்மைகள் ஆயுர்வேதத்தின்படி, மோர் தயிரை விட கனம் குறைவாக உள்ளது. இது வயிற்றை குளிர்ச்சியாக வைத்திருக்கவும், கோடையில் வெப்பத் தாக்கத்தைத் தவிர்க்கவும் உதவுகிறது.
இதில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. எனவே மோர் குடிப்பதன் மூலம் உடலை நீரேற்றமாக வைத்திருக்க முடியும்.
தயிரின் நன்மைகள் தயிரில் கால்சியம், புரதம் மற்றும் வைட்டமின் பி12 உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நல்ல அளவில் காணப்படுகின்றன.
இது குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது.
மலச்சிக்கல், அமிலத்தன்மை மற்றும் வாயு போன்ற வயிற்றுப் பிரச்சினைகளிலிருந்து விடுபட விரும்பினால், தயிர் உட்கொள்வது நல்லது. இது தவிர, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க தயிர் பெரிதும் உதவுகிறது.
கவனிக்க வேண்டிய விஷயம் கோடை காலத்தில் தயிர் உட்கொள்வது அல்லது மோர் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தான். ஆனால் இது உங்கள் உடல் நிலைக்கு தகுந்ததா என பார்த்து அதன் அடிப்படையில் நீங்கள் இதை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.
ஆயுர்வேதத்தின்படி, தயிர் அல்லது மோர் மதிய வேளையில் உட்கொள்ள வேண்டும் என கூறப்படுகின்றது. இரவில் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
இது தவிர இது இரண்டையும் சரியான அளவில் உட்கொள்வது அவசியம் அதிகமாக சாப்பிடும் போது அது நமது உடலில் பல விளைவுகளை ஏற்படுத்தலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |