உணவை விரைவாக சாப்பிடுகிறீர்களா? இந்த நோய்கள் உறுதி
இன்றைய பரபரப்பான வாழ்க்கையில் நாம் அடிக்கடி உணவை உண்ணும் போது அவசரப்படுகிறோம். அலுவலகத்திற்குச் சென்றாலும் சரி, வீட்டு வேலையாக இருந்தாலும் சரி, சீக்கிரம் சாப்பிட்டு முடிக்க வேண்டும் என்று நினைக்கிறோம்.
ஆனால் இதனால் வரும் பின்விளைவை பற்றி யாரும் யோசிப்பது கூட இல்லை. அதற்கு நேரமும் கிடைப்பதில்லை.
இப்போது உங்கள் பொழுதுபோக்கு நேரத்தில் நீங்கள் இணையத்தை பார்வையிடும் போது இந்த பதிவு உங்கள் கண்களுக்கு தென்பட்டால் அது இனிமேல் இந்த தவறை செய்யவிடாமல் பார்த்துக்கொள்ளும் என நம்புகிறோம்.
இந்த பதிவில் உணவை வேகமாக சாப்பிடுவதால் உண்டாகும் நோய் என்ன என்பைதை விரிவாக பார்க்கலாம்.
வேகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
அஜீரணம் மற்றும் வாயு - நாம் உணவை விரைவாகச் சாப்பிடும்போது உணவைச் சரியாக மென்று சாப்பிடுவதில்லை. இதன் காரணமாக பெரிய துண்டுகள் வயிற்றுக்குள் செல்கின்றன.
அதை ஜீரணிக்க வயிறு கடினமாக உழைக்க வேண்டியிருக்கிறது. இதனால் அஜீரணம், வாய்வு மற்றும் வாயு போன்ற பிரச்சனைகள் வரும்.
எடை அதிகரிப்பு - நாம் வேகமாக சாப்பிடும்போது நம் வயிறு நிரம்பிய உணர்வு நமக்கு வலராது. பெரிய பெரிய உணவுகள் வயிற்றில் செல்லும் போது அதன் இடைவெளி காரணமாக நமக்கு இப்படி தோன்றுகின்றன.
இதனால் நாம் தேவைக்கு அதிகமாக உணவை சாப்பிடுகிறோம். இவை உடலில் கூடுதல் கலோரிகளாக உடலில் சேமிக்கப்பட்டு கொழுப்பாக மாறி உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.
இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பு - மிக வேகமாக சாப்பிடுவது திடீரென இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். இந்த அதிகரித்த சர்க்கரையை கட்டுப்படுத்த உடல் அதிக இன்சுலின் உற்பத்தி செய்ய வேண்டும்.
இது நீண்ட காலத்திற்கு நடந்தால், உடல் இன்சுலினுக்கு குறைவான உணர்திறன் கொண்டதாக மாறும் இது வகை 2 நீரிழிவு நோயின் அபாயத்தை அதிகரிக்கிறது.
இதயத்தில் அழுத்தம் - உடல் பருமன் மற்றும் நீரிழிவு இரண்டும் இதய நோய்களுக்கு முக்கிய காரணங்களாகும். நீங்கள் வேகமாக சாப்பிட்டு உங்கள் எடை அதிகரிக்கும்போது அல்லது உங்கள் இரத்த சர்க்கரை கட்டுப்பாடில்லாமல் மாற்றும் இதனால் உங்கள் இதயத்தின் மீதான அழுத்தமும் அதிகரிக்கிறது. இதன் காரணமாக இதய நோய்களின் அபாயம் அதிகரிக்கிறது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |