செலவை குறைத்து கண்ணாடி சருமத்தை பெற வேண்டுமா? இந்த ஃபேஷியல் போதும்
தற்போது இருக்கும் யுவதிகளின் ஒரு ஆசை கொரியர்களை போன்ற கண்ணாடி சருமத் தான். இதற்கு பல செலவுகளை செய்தாலும் பெறுபேறு ஒழுங்காக கிடைக்கதில்லை.
இதற்கு சமையலறையில் இருக்கும் பொருட்களை பயன்படுத்துவது நல்ல பெறுபேற்றை தரும்.சமையலறையில் வைக்கப்படும் சிவப்பு தக்காளி உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உங்கள் முகத்தில் ரோஜா பளபளப்பைக் கொண்டு வரும்.
இந்த தக்காளியுடன் சில பொருட்களை சேர்க்கும் போது நமக்கு கண்ணாடி போன்ற சருமம் கிடைக்கும். தக்காளியை சருமத்தில் பயன்படுத்துவதன் மூலம்,
உங்கள் சருமத்தின் pH அளவை பராமரிக்கிறது மற்றும் நீண்ட காலத்திற்கு சுருக்கங்கள் பிரச்சனை வராமல் சருமத்தை பாதுகாக்கிறது. இந்த பதிவில் தக்காளி பேஷியல் செய்ய என்னென்ன செய்ய வேண்டும் என்பதை முழுமையாக பார்க்கலாம்.
தக்காளி ஃபேஷியல்
சுத்தப்படுத்துதல்: முதலில் முகத்தை சுத்தப்படுத்த வேண்டும். இதற்கு தக்காளி கூழ் மற்றும் பச்சை பால் ஆகியவற்றை ஒன்றாக கலந்து உங்கள் முகம் மற்றும் கழுத்து முழுவதும் காட்டன் பேட் மூலம் தடவ வேண்டும்.
ஸ்க்ரப்: இதன் பின்னர் முகத்தை ஸ்க்ரப் செய்ய வேண்டும். இதற்கு அரை தக்காளியை எடுத்து, தக்காளியின் வெட்டப்பட்ட பகுதியில் சர்க்கரை மற்றும் காபி தூள் சேர்த்து, தக்காளி மற்றும் சர்க்கரை ஸ்க்ரப் கொண்டு 5 நிமிடம் முகத்தை மெதுவாக மசாஜ் செய்யவும்.
இதை வேகமாக செய்ய கூடாது. சர்க்கரை தானியங்கள் சருமத்தை எரிச்சலடையச் செய்யலாம். இதைச் செய்வதன் மூலம், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கும். 5 நிமிடம் கழித்து முகத்தை தண்ணீரில் கழுவவும்.
மாஸ்க்: தக்காளி ஃபேஸ் பேக்கை முகத்தில் போட வேண்டும். இதற்கு 2 டீஸ்பூன் தக்காளி கூழில் 1 டீஸ்பூன் உளுந்து, 2 டீஸ்பூன் தயிர், அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 சிட்டிகை மஞ்சள் சேர்த்து பேஸ்ட்டை தயார் செய்யவும்.
இப்போது இந்த பேஸ்ட்டை முகம் மற்றும் கழுத்தில் தடவி 20 நிமிடங்கள் வைக்கவும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவவும்.இவ்வாறு செய்வதன் மூலம் சருமம் ஈரப்பதத்துடன் இருப்பதோடு, பளபளப்பாகவும் இருக்கும்.
மாய்ஸ்சர்: இந்த மாஸ்க்கை போட்டதன் பின்னர் சருமத்தை ஈரபதமாக்க வேண்டும்.இதற்கு, தக்காளித் துண்டுகளின் மீது கற்றாழை ஜெல்லைப் போட்டு முகத்தில் 10 நிமிடம் மசாஜ் செய்யவும்.
இவ்வாறு செய்வதன் மூலம் முகத்தின் சருமம் நீரேற்றமாகவும், பளபளப்பாகவும் இருக்கும். இதற்கு பின்னர் முகத்தை கழுவ தேவை இல்லை.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |