சரும பளபளப்பிற்கு பிரபல நடிகைகளின் ரகசிய கூற்று இதுதான் என்னனு தெரியுமா?
பிரபல நடிகைகள் தங்கள் அழகாக இருப்பதற்கு மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்று சரியான தூக்கம் என கூறியுள்ளனர் அதை பற்றி முழுமையாக இந்த பதிவில் பார்கலாம்.
தூக்கம்
சருமம் ஆரோக்கியமாக இருக்க அழகாக பளபளக்க வேண்டும் என்றால், எட்டு மணிநேர தூக்கம் மிகவும் அவசியம். சரியான தூக்கம் உங்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, உங்கள் அழகுக்கும் நல்லது.
சீக்கிரம் தூங்கி சீக்கிரம் எழுந்தால் சருமம் பளபளக்கும். நாம் உறங்கும் போது உடல் நீரேற்றத்தை சமநிலைப்படுத்துவதால் நமது சருமம் ஈரப்பதத்தை மீண்டும் பெறுகிறது.
போதியளவு உறக்கம் இல்லாவட்டால் கண்கள் வீங்கிவிடும். இது நீண்ட நேரம் தொடர்ந்தால், முகத்தில் சுருக்கங்களும் தோன்றும்.
இதனால் அதிகமாக கண்களுக்குக் கீழே இருண்ட வட்டங்கள் போன்ற கருந்திட்டுக்கள் போன்ற கருவளையங்கள் உருவாகும். கண்கள் போதுமான ஓய்வு எடுப்பதன் மூலம் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்களைக் குறைக்கலாம்.
உடலில் சரியான அளவு உறக்கம் இல்லாதபோது ரத்த ஓட்டம் சரியாக இருக்காது. இது உடலை மெலியச் செய்யும். ரத்த ஓட்டம் அதிகரித்தால் நமது சருமம் மந்தமாகவும், வறண்டதாகவும் இருக்கக்காது.
சருமத்தை உறுதியாகவும் மிருதுவாகவும் வைத்திருக்க கொலாஜன் அவசியம். போதுமான தூக்கமின்மை உடலை பாதிக்கிறது. கார்டிசோல் அதிகமாக சுரக்கிறது.
இது உங்கள் திசுக்களில் உள்ள கொலாஜனை உடைக்கிறது. தூக்கமின்மையால் அவதிப்படும் பெண்களும் தங்கள் தோலில் இருந்து அதிக தண்ணீரை இழக்கிறார்கள்.
நச்சு இரசாயனங்களும் குவிகின்றன. இது வெளிப்புறமாகவும் உட்புறமாகவும் தோலை பாதிக்கிறது. இதனால் நாம் அழகாக இருப்பதற்கு உறக்கம் தான் முன்னுரிமை பெறுகிறது.
இதற்கு அடுத்தபடி தான் உணவு இடம்பிடிக்கிறது. இதை சரிவர கடைபிடிப்பதில் தான் நடிகைகள் தங்கள் அழகை பாதுகாக்கிறார்கள் என்று கூறியுள்ளனர்.