திருமணத்திற்கு ரெடியாகும் பெண்களுக்கு இந்த டிப்ஸ் அவசியம்! வீட்டிலேயே செய்யலாமாம்..
பொதுவாக புதிதாக திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் சுமார் 2 மாதங்களுக்கு முன்னரே தயாராக வேண்டும். இல்லாவிட்டால் திருமண நாள் வரும் போது மணப்பெண்ணின் முகம் பொலிவற்று காணப்படும்.
திருமணத்திற்கு முன்னர் நிச்சயம், பதிவு திருமணம் மெஹந்தி நிகழ்வு, நலங்கு என நிறைய சடங்குகள் இருக்கும். முறையான பராமரிப்பு இல்லாவிட்டால் புத்துணர்ச்சியின்றி காணப்படும்.
இது மட்டுமல்ல மணப்பெண்ணின் மனநிலையும் மகிழ்ச்சியாக இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் அவர்களின் முகம் பொலிவாக இருக்கும்.
அந்த வகையில் திருமண நேரத்தில் மணப்பெண்கள் அழகாக தோற்றமளிக்க என்ன செய்ய வேண்டும் என தொடர்ந்து பார்க்கலாம்.
தலைமுடி பராமரிப்பு
1. மணப்பெண்களின் தலைமுடி குறித்து கண்டிப்பாக அனைவராலும் பார்க்கப்படுகிறது. இதற்காக அரிசி கழுவும் தண்ணீரால் தினமும் குளித்த பின்னர் தலைமுடியை அதனை பயன்படுத்தி கழுவ வேண்டும்.
இவ்வாறு செய்வதால் தலைமுடி வளர்ச்சி அதிகமாகும், தலைமுடி பட்டு போல் அழகாக காட்சியளிக்கும். திருமணத்தின் போது வேண்டிய ஹேயர் ஸ்டைல் போட்டு கொள்ளலாம்.
2. இதனை தொடர்ந்து மருதாணி இலையுடன் எலுமிச்சை சாறு கலந்து தலைமுடியை கலரிங் செய்ய பயன்படுத்தலாம். இந்த ரெமடி பயன்படுத்தினால் தலைமுடிக்கான சேதம் குறையும்.
முகம் பராமரிப்பு
1. முகம் பொலிவில்லை என கஷ்டப்படும் பெண்கள் காலையில் தினமும் எலுமிச்சை சாறுடன் சிறிது பால் சேர்த்து சில துளிகள் கிளிசரின் சேர்த்து முகத்தில் பூசி சுமார், 1/2 மணி நேரம் ஊறவைத்து கழுவினால் முகம் ஒரே மாத்தில் பளபளப்பாக மாறும்.
2. தக்காளி சாற்றை கூட அழகு சாதன பொருளாக பயன்படுத்தலாம், முகம் சுருக்கம் குறைந்து அழகாக மாறும்.
3. சிலருக்கு முகம் வரண்டு காணப்படும் இவ்வாறு காணப்படும் போது மணப்பெண்ணின் பாதி அழகையே இது குறைத்து விடும். இதனால் தினமும் வெள்ளரிக்காயை அரைத்து முகத்தில் நன்றாக தடவி 30 நிமிடங்கள் உலர விட்டு கழுவினால் இந்த பிரச்சினை குணப்படுத்தப்படும்.
4. மணப்பெண்ணாக இருப்பவர்களுக்கு முகப்பொலிவு என்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதனால் காலையில் சவர்க்காரத்திற்கு பதிலாக பாதாமால் செய்யப்படும் பேஸ்ட்டை பயன்படுத்தினால் முகம் பொலிவாகவும், அழகாகவும் இருக்கும்.
5. முகம் கருமையாக இருப்பவர்கள் தினமும் காலையில், கடலை மாவையும் தயிரையும் சேர்த்து முகத்தில் பூசி வந்தால் காலப்போக்கில் இந்த பிரச்சினையும் சரிச் செய்யப்படும்.