தேவதை போல ஜொலிக்க வைக்க மேக்கப் தேவையில்லை! இந்த சமையலறை பொருட்களே போதும்
செயற்கையான கிரீம்களை விட இயற்கை முறை வைத்தியத்தில் அழகினை மெருகூட்டலாம்.
இதனால், சமையலறை அழகு வைத்திய குறிப்புகள் தனி ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளது.
உங்கள் சரும ஆரோக்கியத்தை பராமரிக்க உங்க சமையலறையில் உள்ள பொருட்களை எப்படி உதவும் என்று பார்க்கலாம்.
வெள்ளரிக்காய் சாப்பிட்ட உடன் இதையெல்லாம் மறந்தும் கூட சாப்பிடாதீங்க...
மஞ்சள் மற்றும் குங்குமப்பூ
மஞ்சள் பொலிவிழந்த சருமத்திற்கு புத்துணர்ச்சி அளிக்க உதவும். மறுபுறம், குங்குமப்பூ சருமத்தில் உள்ள அழுக்கை வெளியேற்றும் மற்றும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.
அதற்கு ஒரு பௌலில் மஞ்சள் தூள் மற்றும் குங்குமப்பூவை எடுத்து, பால் சேர்த்து கலந்து, அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
இலங்கை போராட்டத்தில் ஒரு ருசிகரம்...இளைஞர் செய்த காரியம்! நடுதெருவில் நின்ற பெண்!
எலுமிச்சை மற்றும் தேன்
தேன் சருமத்தை நீரேற்றத்துடனும், ஊட்டமளித்து அழகாகவும் வைத்துக் கொள்ளும். அதேப் போல் எலுமிச்சையில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது முகத்தை பொலிவாக்கும்.
அதற்கு ஒரு பௌலில் சில துளிகள் எலுமிச்சை சாற்றில் சிறிது தேன் சேர்த்து கலந்து,முகத்தில் தடவி நன்கு 10 நிமிடம் ஊற வைத்து நன்கு காய்ந்ததும், வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
ஆரஞ்சு தோல்
இந்த ஆரஞ்சு தோலை மிக்சர் ஜாரில் போட்டு, அத்துடன் சிறிது தேன் மற்றும் குங்குமப்பூ சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் அந்த பேஸ்ட்டை ஐஸ் க்யூம் ட்ரேயில் நிரப்பி ஃப்ரீசரில் வைக்க வேண்டும். இந்த ஐஸ் கட்டிகளைக் கொண்டு தினமும் முகத்தை தேய்த்து கழுவி வந்தால், முகம் பளிச்சென்று இருக்கும்.