சருமத்திற்கு ஒரே பேக்கில் புது பொலிவு கொடுக்கும் ஓட்ஸ்.. எப்படி போடணும் தெரியுமா?
பொதுவாக மனித உடலில் மிக முக்கியமான உறுப்பாக சருமம் பார்க்கப்படுகின்றது.
பல லேயர்களுடன் பலத்த பாதுகாப்பு வழங்கும் இந்த அமைப்பில் ஏதாவது கோளாறுகள் ஏற்படுமாயின் அது பாரிய விளைவை ஏற்படுத்தும்.
சருமத்திற்கு மாசுபாடு, பருவநிலை மாற்றம், அதிகப்படியாக சூரிய ஒளி படுதல் உள்ளிட்ட காரணங்களால் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது.
இதன்படி, சரும பிரச்சினைகளில் சருமம் வறட்சி முக்கிய இடத்தை பிடிக்கின்றது. இந்த பிரச்சினையை என்ன செய்தாலும் சரியாக்க முடியவில்லையா? அப்படியாயின் சரும பிரச்சினையுள்ளவர்கள் நிவாரணத்திற்காக ஓட்ஸை பயன்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், சரும பிரச்சினைக்கும் ஓட்ஸிற்கும் என்ன தொடர்பு என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
ஓட்ஸ் பயன்பாடு
1. ஓட்ஸை பலர் காலைநேர பசியை போக்கும் உணவாக மட்டும் தான் பார்க்கிறார்கள். ஆனால் இது சரும பாதுகாப்பிலும் முக்கிய இடத்தை பிடிக்கின்றது.
2. பொதுவாக நாம் பயன்படுத்தும் பொருட்களில் ஆன்டி ஆக்ஸிடெண்ட் சத்துக்கள் இருக்கும். இதனால் தான் நுண்ணுயிர்களுக்கு எதிராக செயல்பட்டு சருமத்திற்கான பொலிவை கொடுக்கின்றது. இதனால் தான் மருத்துவர்களின் பரிந்துரை எப்போதும் இயற்கை உணவு பொருட்களாக இருக்கும்.
3. நாம் வழக்கமாக பயன்படுத்தும் சோப், லோஷன், மேக்கப் உள்ளிட்ட பொருட்கள் காலப்போக்கில் ஒரு வகையான அலர்ஜியை ஏற்படுத்தும். ஆனால் ஓட்ஸ் பயன்படுத்துவதால் எந்தவிதமான பக்கவிளைவுகளும் இல்லை.
4. இந்தியா போன்ற நாடுகளில் இருக்கும் பெண்களின் சருமம் பார்ப்பதற்கு மெல்லியதாக இருக்கும். இதனால் சூரியனின் தாக்கம் அதிகமாக இருக்கும். இது 30 வயதை தாண்டிய பெண்களை தான் அதிகமாக தாக்குகின்றது. எனவே ஓட்ஸ் போன்ற இயற்கை வழியை கடைபிடிப்பதால் சருமம் வலிமை பெறுகின்றது.
5. ஓட்ஸை எடுத்து பேஸ்ட் போல் அரைத்து சருமத்தில் அப்ளை செய்யவும். இது சருமத்திற்கு தேவையான ஊட்டத்தை கொடுத்து முகத்திலுள்ள வறட்சி, அலர்ஜி இவை இரண்டையும் இல்லாமல் ஆக்குகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |