உங்கள் உடலில் இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ உங்களுக்கு இந்த பிரச்சனை இருக்கு தெரிஞ்சுக்கோங்க
உடலின் உள்ளே ஏற்படும் பிரச்சனைகளை உடல் சில அறிகுறிகள் மூலம் வெளியே காட்டுகின்றது.
தோல் எமது உடல் உறுப்பின் மிகப்பெரும் உணர்திறன் கொண்ட உறுப்பாக காணப்படகின்றது. சரும பிரச்சனைகளுக்கு மரபணுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
சருமத்தை போதுமான அளவு கவனித்துக்கொள்ள வேண்டியது அவசியம். நிறைய தண்ணீரைக் குடிப்பது, எந்த நேரமும் உங்கள் முகத்தை கழுவுவது, ஒவ்வொரு நாளும் குளிப்பது, உடற்பயிற்சி செய்வது, போதுமான ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் வைட்டமின்களை உட்கொள்வது ஆரோக்கியமான சருமத்தை பராமரிக்க உதவுகின்றது.
அந்த வகையில் உடலில் மற்றும் முகத்தில் காணப்படும் சில அறிகுறிகளை வைத்து பிரச்சினை வருவதற்கான காரணங்களை இந்த பதிவில் பார்க்கலாம்.
அறிகுறிகள்
1. முகப்பரு என்பது ஏன் வருகிறது என்பதை யாரும் அவதானிப்பது இல்லை. முகப்பரு பொதுவாக ஆண் பெண் என இருபாலாருக்கும் வரும்.
இது எல்லோரும் அனுபவிக்கும் ஒரு சரும பிரச்சனையாகும். இதற்கு காரணம் மன அழுத்தம் மற்றும் மோசமான உணவுப் பழக்கம் என கூறப்பட்டுள்ளது.
உங்கள் உடலில் ஹார்மோன் சமநிலை இல்லாமல் இருப்பதால் தான் இந்த முகப்பருக்கள் வருகின்றன.
2. உங்கள் தோலில் சிவப்பு தடிப்புக்கள் அல்லது அரிப்புக்கள் போன்ற பிரச்சனைகள் உங்கள் தோலில் ஏற்பட்டால் அதற்கான காரணம் நீங்கள் உடலுக்கு ஒத்து வராத உணவுகளை உண்டிருக்கலாம். இதனால் தோல் அரிப்பு ஏற்படும்.
3. பருக்களால் தோன்றுவது மட்டுமல்ல சருமத்தில் எலட்லா இடங்களிலும் தழும்புகள் வருகின்றன.
இந்த தழும்புகள் உங்களுக்கு இருந்தால் உங்கள் உடலில் ஏதோ ஒரு பிரச்சனை உள்ளது. அதனால் தான் தழும்புகள் உருவாகும். இவ்வாறு தழும்புகள் இருந்தால் நீங்கள் வைத்தியரை நாடி தீர்வை பெற்று கொள்ளுங்கள்.
4. உங்களது தோல் மிகவும் வறண்டு போய் அரிப்பு ஏற்படுகிறதா? இதற்கான காரணம் நீங்கள் அடோபிக் டெர்மடிடிஸால் என்ற நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.
இது கூடினால் இது உங்களுக்கு தோல் அரிச்சல் மற்றும் காயங்களை உண்டாக்கலாம். இந்த அறிகுறிகள் சருமத்தில் தெரிந்தால் வைத்தியரை நாட வேண்டும்.
5.மன அழுத்தம் உடலின் உள்ளே மட்டும் இருக்காது இது வெளியில் உடையக்கூடிய நகங்கள், முடி உதிர்தல், படை நோய் மற்றும் வியர்வையை அதிகரித்தல் போன்ற பிரச்சனைகள் வரும்.
முடிந்தவரை மன அழுத்தத்தை உள்ளே வைத்திருக்காமல் அதற்கான தீர்வை கண்டு செயற்பட்டால் இது போன்ற பிரச்சனைகள் வராது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |