தலையில் உள்ள பொடுகுத் தொல்லைக்கு பால் முழுத்தீர்வு தருமா?
பெண்களுக்கு அழகை தருவது முடிதான் அந்த முடியை சிறப்பாக பராமரிப்பது எல்லோருக்கும் மிகவும் பிடித்த விஷயமாகும்.
சிலருக்கு இந்த முடி கொட்டுவது ஒரு பிரச்சனையாக இருந்தாலும் அதிலும் பார்க்க தலையில் வரும் பொடுகுத் தொல்லை பெரும் பிரச்சனையாக உள்ளது.
இந்த பிரச்சனை்காக நீங்கள் வெளி வைத்தியங்கள் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.
இதை வலீடிலுள்ள இயற்கையான பொருட்களை வைத்தே செய்யலாம். அந்த வகையில் தலைமுடிக்கு பால் உதவுமா? என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பால்
உடலில் உள்ள பிரச்சனைக்கு நாம் வேறு வழியில் மருந்துகளை தேடுவதை விட அதற்கு நம் அருகில் இருக்கும் இயற்கை பொருட்களை தாராளமாக பயன்படுத்தலாம்.
சத்தமான பசும்பாலில் கேசீன் மற்றும் வே போன்ற புரதங்கள் அதிகமாக உள்ளது. இந்த புரதங்கள் தான் தலைமுடியை அடர்த்தியாகவும் நீளமாகவும் அதன் வடிவத்தை மிருதுவாகவும் மாற்ற உதவும்.
புதிய முடிகள் வளர்வதற்கு வைட்டமின் டி மிகவும் அவசியமாகும். பாலில் வைட்டமின் டி நிறைவாக உள்ளது. பாலில் உள்ள கால்சியம் முடிகள் உதிர்வதை தடுத்து புதிய முடிகள் வளரவும் உதவி செய்யும்.
அதே போல முடியை மிருதுவாகவும் பளபளப்பாகவும் வைக்ககூடிய பி6, பி7, வைட்டமின் இ, பொட்டாசியம் போன்றவையும் பாலில் இருக்கின்றது. இதனால் முடி பார்ப்பற்கு மிகவும் அழகாக இருக்கும்.
தலைமுடிக்கு பால் பயன்படுத்துவதன் மூலம் பொடுகுத்தொல்லை முற்றாகவே இல்லாமல் போய் விடும். புற ஊதாக்கதிர்களால் நமது தலைமுடி மிகவும் மோசமாக வறட்சியாக காணப்படும்.
இதனால் வெடிப்புக்கள் ஏற்படுகின்றன. இதற்கு பால் க்ரீமை தலைமுடியில் அப்ளை செய்வதன் மூலம் முடி வெடிப்பின் பாதிப்புகளை குறைக்க முடியும்.
பாலை தலைமுடிக்கு பயன்படுத்துவதால் தலைமுடியின் வடிவத்தை மேம்படுத்தி அழகை கூடுதலாக காட்டக்கூடியது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |