சுருட்டை முடியை பளபளப்பாக வேண்டுமா? இதை செய்தால் போதும்
சுருட்டை முடியை வலுவாகவும், பளபளப்பாகவும் மாற்ற சில எளிய குறிப்புகளை பயன்படுத்தலாம். இந்த கட்டுரையில் சுருட்டை முடியை கவனித்துக்கொள்ளக்கூடிய சில விஷயங்களை பார்க்கலாம்.
சுருட்டை முடி
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தலைமுடியின் வகைகள் காணப்படுகின்றன. அதிலும் சுருட்டை முடி இருப்பவர்கள் ஒரு தனித்துவமான அழகை கொண்டவர்கள். இந்த விதமான தலைமுடியை பராமரிப்பது மிகவும் கடினம்.
இதை சில வீட்டு முறைப்படியும் பராமரிக்கலாம்.தேனில் பல மருத்துவ குணங்கள் உள்ளதால் அதன் பண்புகள் முடி வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். தேனில் வைட்டமின்கள், தாதுக்கள், அமினோ அமிலங்கள் மற்றும் பல பொருட்கள் உள்ளன அவை முடியை வலுவாகவும் பளபளப்பாகவும் மாற்றுவதற்கு பயனுள்ளதாக இருக்கும்.
வாழைப்பழத்தை அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.அதனுடன் தேன் சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை முடியில் தடவ வேண்டும். 20 நிமிடங்களுக்குப் பிறகு முடியைக் கழுவவும்.
இதை வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்யவும். இந்த முறை பிடிக்காதவர்கள் தயிர் செய்முறையை பயன்படுத்தலாம். ஒரு பாத்திரத்தில் தயிர் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் தேன் சேர்க்கவும். அதன் பிறகு கிளிசரின் சேர்க்கவும் இந்த பேஸ்ட்டை முடியில் தடவவும்.
20 நிமிடங்களுக்குப் பிறகு முடியைக் கழுவவும். இந்த பரிகாரத்தை வாரத்திற்கு 2 முதல் 3 முறை செய்யலாம். இந்த முறைகளை செய்வதன் மூலம் சுருட்டை முடியை அழகாகவும் பளபளப்பாகவும் வைத்துக்கொள்ள முடியும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |