சந்தனத்தை எதுக்கெல்லாம் பயன்படுத்தலாம் அதில் இருக்கும் பயன்கள் என்ன?
பல்வேறு சுகாதார தேவைகளுக்கு பயன்படுத்தும் சந்தனத்தில் இருக்கும் நன்மைகள் என்னென்ன நன்மை இருக்கின்றது என்பதை இந்த பதிவில் பார்கலாம்.
சந்தனம்
சந்தன மரம் 8 முதல் 12 மீ உயரம் மற்றும் 2.5 மீ சுற்றளவு வரை வளரும்.
பட்டை மென்மையானது மற்றும் சாம்பல் பழுப்பு நிறத்தில் உள்ளது, இது பதட்டத்தைப் போக்கவும், வயதான அறிகுறிகளைக் குறைக்கவும், தோல் அழற்சியைக் குறைக்கவும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சந்தனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த மரத்தில் உள்ள அனைத்து பாகங்களும் உடலுக்கு நன்மை தருகின்றன. சந்தன மரங்கள் வளரும் இடங்களில் மழைப் பொழிவு ஏற்படுகிறது. சந்தன மரக்கட்டைகள் அதிக பயன் தருகின்றன.
சந்தன விதைகள் மருத்துவத்தில் பயன்படுகின்றன. வெள்ளை சந்தன மரக்கட்டைகள் சரும அழகு மற்றும் உடல் உள்ளுறுப்புகளின் சீரான இயக்கத்திற்கு உதவுகின்றன.
இந்த சந்தன மரத்திலான எண்ணெய் மன அழுத்தங்களை போக்கி சருமத்தை ஒரு நிலையில் வைத்திருக்கிறது.
சந்தனத்தை அரைத்து தலையில் தடவினால், தலையில் கோடைக்காலத்தில் ஏற்படும் கொப்புளங்கள், தலைவலி மற்றும் மூளை, இதய பாதிப்புகளை சரி செய்கின்றது.
ரத்தத்தை சுத்தப்படுத்தி உடலை குளிர்விப்பதில் சந்தனம் முக்கிய பங்கு வகிக்கிறது. சந்தனத்துடன் எலுமிச்சைச் சாறு சேர்த்து அரிப்பு, தேமல், வீக்கம் உள்ள இடங்களில் தடவினால் விரைவில் குணமடையும்.
சிறுநீர் எரிச்சல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த சந்தனத்தை தண்ணீரில் கலந்து பருக வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் இந்த பிரச்சனைக்கு முடிவு கட்டலாம்.