தலைமுடி மடமடனு அசுர வேகத்தில் வளரணுமா? இந்த ஒரு பொருள் இருந்தா போதும்
முடி உதிர்தல் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. இது வயது, மன அழுத்தம், ஹார்மோன் மாற்றங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக ஏற்படலாம்.
பெரும்பாலான மக்கள் இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபட விலையுயர்ந்த முடி பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள்.ஆனால் இந்தப் பொருட்கள் சில சமயங்களில் முடிக்கு மேலும் சேதத்தை ஏற்படுத்தும்.
இதற்கு வீட்டில் உள்ள பொருட்களை வைத்து வீட்டு வைத்தியம் செய்தால் முடிக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் முடி வளரும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
தலைமுடி வளர்ச்சி
வெங்காய சாற்றில் சல்பர் அதிகம் உள்ளது. இது கொலாஜன் உற்பத்தி அதிகரிக்கிறது மற்றும் முடியின் வேர்களில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
இதில் அதிகமாக இருககும் ஆன்டி-பாக்டீரியல் பண்பு இருப்பதால் முடி வேர்கால்கள் வலுவாகும். எனவே வெங்காயத்தின் சாற்றினை 2
டீஸ்பூன் எடுத்து, அத்துடன் 2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெயை சேர்த்து கலந்து முடி வேர்களில் படும்படி தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து குறைந்தது 30 நிமிடம் ஊற வைத்து குளித்து வந்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
தலைமுடியின் வளர்ச்சிக்கு விளக்கெண்ணெய் அதிகம் உதவும். இந்த எண்ணெயில் ரிசினோலிக் அமிலம் உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது.
விளக்கெண்ணெயை 2 டீஸ்பூன் எடுத்து அதனுடன் 2 டீஸ்பூன் தேங்காய் எஎண்ணெய் சேர்த்து கலந்து லேசாக சூடேற்றி முடி வேர்களில் படும்படி தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து குறைந்தது 1 மணிநேரம் ஊற வைத்து குளித்தால் முடியின் வளர்ச்சி சரசரவென்று அதிகரிக்கும்.
வெந்தயத்தில் புரோட்டீன், இரும்புச்சத்து, நிகோடினிக் அமிலம் உள்ளன. இவை தலைமுடியின் வளர்ச்சிக்கு அவசியமான சத்துக்களாகும்.
வெந்தய விதைகளை 2 டீஸ்பூன் எடுத்து நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் அரைத்து
2 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து முடி வேர்கால்களில் பூசி வர வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 தடவை பூசி வந்தால் நல்ல முடி வளர்ச்சி உண்டாகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |