முடி சும்மா காடு மாதிரி வளரணுமா? இதை தலையில் தடவுவதை நிறுத்துங்க
அடர்த்தியான, மென்மையான மற்றும் நீண்ட, கருப்பு முடியை யாருக்குதான் பிடிக்காது. ஆனால் தூசி மற்றும் மாசுபாடு நிறைந்த இன்றைய பரபரப்பான வாழ்க்கையில், ஒருவருக்கு விருப்பமான அழகான கூந்தலைப் பெறுவது பலருக்கும் ஒரு கனவாகவே உள்ளது.
பல நிபுணர்கள் இதற்கு கருத்து தெரிவித்து உள்ளனர். முடி கொட்டுதல் தற்போது பலருக்கும் உள்ள பொதுவான பிரச்சனையாகும். முடி உதிர்தல் என்பது எந்த வயதினரையும் அல்லது மரபணு பின்னணியையும் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும்.
இதற்கு உங்கள் பரபரப்பான வாழ்க்கை முறை, மாசுபாடு அல்லது வானிலை போன்ற பல காரணங்கள் இருக்கலாம். இதற்கெல்லாம் ஒரு முடிவாக தான் இந்த பதிவில் எளிய நல்ல வழிமுறையை பார்க்கப்போகின்றோம்.
முடி வளர்ச்சியை தூண்ட செய்ய வேண்டியது
வெங்காயச் சாறு - முடி உதிர்தல் பிரச்சனையிலிருந்து விடுபட உதவும். வெங்காயத்தை எடுத்து, அதன் சாற்றைப் பிரித்தெடுத்து, எண்ணெய் போல தலையில் மசாஜ் செய்ய வேண்டும்.
வெங்காயச்சாறு பூசினால் ஐந்து நிமிடங்கள் மாத்திரமே தலையில் வைத்திருக்க வேண்டும். இது தவிர இயற்கையில் கிடைக்கும் நெல்லிக்காய், செவ்வரத்தம் பூ இப்படி பல மூலினை பொருட்களை எந்த முறையிலாவது தலைக்கு தடவலாம்.
இதனால் முடி வளர்ச்சி தூண்டப்படும். இதில் மிகவும் முக்கியதாக கூற வந்த விடயம் முடி வளர வேண்டும் என நினைத்தால் அதிகமாக எண்ணெய் தடவுவதை கைவிட வேண்டும்.
எண்ணையானது நமது முன்னோர்கள் நமக்கு உடல் சூட்டை தணிக்க உச்சந்தலையில் பூச சொல்லி கொடுத்த விடயம். இது இப்போது கொஞ்சம் சொஞ்சமாக மாறி தலைமுடி வளர்வதற்கு தான் எண்ணெய் பூச வேண்டும் என தற்போது வைரலாகி விட்டது.
தலைக்கு வாரத்தில் இரண்டு நாட்கள் எண்ணெய் தேற்ய்த்து பின் குளித்து வந்தாலே முடி வளர்ச்சி நன்றாக இருக்கும். வெங்காய சாறுடன் வெந்தய சாற்றை கலந்து தலைக்கு தடவி வந்தால் முடி வளர்ச்சி மாதத்திற்கு மாதம் அதிகரிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |