அம்மாவ காணோம்! தாயை தேடி அலையும் கரடிக்குட்டிகள்- நெகிழ்ச்சி சம்பவம்
நீலகிரியின் கோத்தகிரி அருகே உள்ள மிளிதேன், கேர்கம்பை, இந்திரா நகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரடி நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு மக்கள் தகவல் அளித்தனர்.
பகல் மற்றும் இரவு நேரங்களில் குடியிருப்பு, தேயிலை தோட்டங்களில் உலா வரும் கரடிகளால் பிரச்சனை ஏற்படுவதாகவும் தெரிவித்தனர்.
இதனையடுத்து கரடிகளை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்திருந்தனர். அப்படி கிராமத்தின் நடுவே வைக்கப்பட்டிருந்த இரும்பு கூண்டில் கடந்த 3ம் தேதி தாய் கரடி சிக்கியது.

சிக்கிய அந்தக் கரடியை, கோரகுந்தாவில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் கொண்டு விட்டனர்.
தற்போது தாயை தேடி தினந்தோறும் அதன் குட்டிகள் வலம் வருகிறதாம், தாயை காணாமல் மிக சோகமாக சுற்றுத்திரியும் குட்டிகளையும் அதே கோரகுந்தா வனப்பகுதியில் விடவேண்டும் என்று கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
