Viral Video: தன்னை காப்பாற்றியவரை பிரிய முடியாமல் கட்டிப்பிடித்த கரடிக்குட்டி
காட்டு தீயில் இருந்து ஒரு கரடி குட்டியை ஒரு இளைஞன் காப்பற்றியதற்காக அந்த கரடி குட்டி அந்த இளைஞனை பிரிய முடியாமல் அவரை சுற்றி சுற்றி வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.
கரடி குட்டி
சமூக வலைத்தளங்களில் வித்தியாசமான வீடியோக்கள் எவ்வளவோ கண்டிருப்போம். அதில் சில வீடியோக்கள் எமக்குள் ஏதோ ஒரு வகையில் சில உணர்ச்சிகளை கொண்டு வரும்.
இவ்வாறான ஒரு வீடியோ தான் சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது. ஒரு காட்டுதீயில் மாட்டி இருந்த கரடி குட்டியை இளைஞன் ஒருவன் காப்பாற்றி இருக்கிறான்.
அந்த கரடிக்குட்டி அவரை பிரிய முடியாமல் அவரின் கால்களை பிடித்து தனது அன்பை வெளிகாட்டுகிறது. அப்போது அந்த இளைஞனும் அந்த கரடி குட்டியை கட்டி பிடித்து விளையாடுகிறார்.
தற்போது இந்த வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி வருகின்றது.
Baby bear refuses to leave the man who saved him from a fire pic.twitter.com/WRS0FolvYs
— Historic Vids (@historyinmemes) March 2, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |