ஆபத்தை உணர்த்தும் வௌவால்... கனவில் கண்டால் என்ன பலன்னு தெரியுமா?
பொதுவாகவே வௌவால்களை அடிப்படையாக வைத்து சகுனம் பார்க்கப்படுவது தொன்றுதொட்டு ஒரு வழக்கமாக இருக்கின்றது. வௌவாலை கனவில் கண்டால் பலரும் குழப்பமடைவது உண்டு.
வௌவால் பற்றிய கனவுகள் இயல்பாகவே நம் உளவியல் ஆரோக்கியத்தை பாதிக்கக் கூடியது. கனவில் வௌவாலை கண்டால் என்ன மாதிரியான அசம்பாவிதங்கள் ஏற்படும் என்பது குறித்து கனவு சாஸ்திரத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.இது தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.
வௌவால் பற்றிய கனவு
இரவிலும் சரி, பகலிலும் சரி தூக்கத்தில் கனவு வருவது மிகவும் இயல்பான விடயமாகவே காணப்படுகின்றது. ஆனால் கனவில் வரும் விஷயங்கள் நம் வாழ்வில் நடக்கும் பல நிகழ்வுகளை குறிக்கின்றன.
கனவில் வரும் சில விடயங்கள் மங்களகரமானதாக கருதப்படும் அதே வேளை சில விடயங்களை கனவில் காண்பது ஆபத்து குறித்து ஆழ் மனம் எச்சரிப்பதாக அமைகின்றது.
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கனவில் வெளவால்களைப் பார்ப்பது அசுபமாக கருதப்படுகிறது. மேலும் கனவில் வெளவால்கள் உங்களைத் தாக்குவதை போல் கண்டால் அது மோசமான விளைவை ஏற்படுத்தும்.
இந்த கனவை நீங்கள் கண்டால், நீங்கள் சில மோசமான விளைவுகளை சந்திப்பீர்கள் என்று அர்த்தம். ஒரு நபரைப் பற்றி நீங்கள் மோசமாக உணரும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.
கனவு அறிவியலின் படி, உங்கள் கனவில் வௌவால்கள் காணப்பட்டால், உங்களுக்கு ஏதாவது கெட்டது நடக்கப் போகிறது என்று அர்த்தம்.
இது போன்ற ஒரு கனவு என்பது எதிர்காலத்தில் ஏற்படும் அசம்பாவிதங்கள் குறித்து நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாக கருதப்படுகின்றது.
குறிப்பாக வௌவால் கூட்டத்ததை கனவில் காண்பது நினைத்து கூட பார்க்காத அளவிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் என ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.
அத்தகைய கனவைக் கண்டவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் ஏனெனில் இந்த கனவு உங்கள் வேலை அல்லது வியாபாரத்தை இழக்க நேரிடும் என்பதைக் உணர்த்துகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |