பிசிசிஐ தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறாரா சவுரவ் கங்குலி? வெளியிட்ட அறிக்கையால் அதிர்ச்சி!
பிசிசிஐ (BCCI) தலைவராக இருந்து வரும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான சவுரவ் கங்குலி 30 ஆண்டுகள் கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார்.
30 ஆண்டு பயணம்
மேலும், இந்த பயணத்தில் உடன் இருந்தவர்கள் அனைவருக்கும் நன்றியையும் தெரிவிப்பதாகவும், பலருக்கும் உதவும் வகையில் ஒன்றை தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும், இந்த புதிய அத்தியாத்திற்கும் அனைவரும் ஆதரவு இருக்கும் என நம்புவதாக பதிவிட்டுள்ளார்.
மறுப்பு
கங்குலியின் இந்த பதிவால் அவர் பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்துவிலகப்போவதாக தகவல்கள் பரவி வருகிறது.
ஆனால், கங்குலி பதவியில் இருந்து விலகப்போவது இல்லை என பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா மறுப்பு தெரிவித்துள்ளார்.
அரசியலில் நுழைகிறாரா?
மேலும், இந்த பதிவின் மூலம் கங்குலி அரசியலுக்குள் நுழைகிறாரா, பாஜகவில் இணைகிறாரா என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
குடியரசுத் தலைவர் மூலம் இவர் ராஜ்ய சபா நியமன எம்பி ஆக வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.
— Sourav Ganguly (@SGanguly99) June 1, 2022