இனி அப்படி செய்யாதீர்கள்... தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு பிசிசிஐ விடுத்த திடீர் எச்சரிக்கை!
இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணியுடன் 3 டி20 போட்டிகளை விளையாடி வருகிறது. நடந்து முடிந்த இரண்டு டி20 போட்டிகளிலும் வென்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இதனிடையே, டி20 உலகக்கோப்பைகாக உருவாக்கப்பட்டு வரும் இந்திய அணியில் முக்கிய இடத்தை பிடித்துள்ளவர் தினேஷ் கார்த்திக் தான். அயர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்க தொடரில் சிறப்பாக விளையாடிய அவர், இங்கிலாந்து தொடரில் சற்று சொதப்பியுள்ளார்.
முதல் போட்டியில் 7 பந்துகளில் 11 ரன்களும், 2வது போட்டியில் 17 பந்துகளில் 12 ரன்களையும் மட்டுமே அடித்து ஏமாற்றினார். ஆனால், அவர் இறங்கும் கடைசி இரண்டு அல்லது மூன்று ஓவர்கள் என்பதால், அவர் 20 ஓவர் வரை நின்று விளையாட வேண்டும் என்பதே முன்னாள் வீரர்களின் கருத்தாகவே உள்ளது.

பிசிசிஐ எச்சரிக்கை
இதைத்தொடர்ந்து, தினேஷ் கார்த்திக்கிற்கு பிசிசிஐ எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது அவருடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளது. கடந்த 2 போட்டிகளிலும் நீங்கள் சரியாக விளையாடவில்லை.
அயர்லாந்து மற்றும் தென்னாப்பிரிக்க தொடர்களில் விளையாடியதன் மூலம் உங்களின் ஃபார்மை அறிந்தோம். ஆனால் ரன் அவுட் விஷயங்களில் கவனம் தேவை.
மேலும், 2 வது டி20 போட்டியில் அந்த ரன் அவுட்டை உங்களால் தவிர்த்திருக்க முடியும். ஜடேஜாவுடன் சரியான புரிதல் இருந்திருந்தால், பிரச்சினையே இருந்திருக்காது.
மேலும் ரன் அவுட்டிற்காக டைவ் அடித்தீர்கள். அப்போது காயம் ஏற்பட்டிருந்தால், நிச்சயம் அணியிலிருந்து நீக்கப்படும் நிலை உருவாகியிருக்கும்.
எனவே ரன் எடுக்கும் போது கூடுதல் கவனமாக இருங்கள் என எச்சரித்துள்ளனர் எனக்கூறப்படுகிறது.