இந்திய வீரர்களின் 2022-க்கான சம்பள பட்டியலை வெளியிட்ட பிசிசிஐ! பரிதாபத்தில் முக்கிய வீரர்கள்;
இந்திய அணி தற்போது இலங்கை அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதனிடையே, இந்திய கிரிக்கெட் வாரியம் 2022-ம் ஆண்டுக்கான வீரர்களின் சம்பள பட்டியலை வெளியிட்டுள்ளது.
அதன்படி அஜிங்க்யா ரஹானே மற்றும் சேதேஷ்வர் புஜாரா ஆகியோர் கிரேடு A-யில் இருந்து B-க்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், பிசிசிஐ சம்பள பட்டியலை நான்கு பிரிவுகளாக கொண்டுள்ளது.
அதில் A+ ஆண்டு ஊதியம் ரூ. 7 கோடி, A, B மற்றும் C பிரிவுகளின் மதிப்பு முறையே ரூ.5 கோடி, ரூ.3 கோடி மற்றும் ரூ.1 கோடி ஆகும். கடந்த ஆண்டு, 28 கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள ஒப்பந்தங்கள் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 27 வீரர்களாக குறைக்கப்பட்டு உள்ளது.
மேலும், ரோகித் ஷர்மா, விராட் கோலி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் A+ வீரர்களாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். கிரேட் A-ல் இருந்த புஜாரா, ரஹானே மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் தற்போது இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், கிரேடு B-க்கு தள்ளப்பட்டுள்ளனர்.
10 வீரர்களைக் கொண்டிருந்த குரூப் A, இப்போது ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பந்த், கே.எல். ராகுல் மற்றும் முகமது ஷமி ஆகிய 5 பேர் மட்டுமே உள்ளனர்.
இவர்களையடுத்து, காயத்தால் பாதிக்கப்பட்ட ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா, மூத்த தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஆகியோர் கிரேடு A-ல் இருந்து C-க்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மயங்க் அகர்வால் தற்போது B-யில் இருந்து C-விற்கு மாற்றப்பட்டுள்ளார். முகமது Cராஜ் குரூப் B-யிலும், சூர்யகுமார் யாதவ் குரூப் C-யிலும் இடம் பெற்றுள்ளனர். விருத்திமான் சாஹா, குரூப் B-யில் இருந்து C-க்கு மாற்றப்பட்டுள்ளார்.