பிக்பாஸ் கதவு திறக்கும் வெளியே போங்க.. அரோராவை சாடிய விஜய் சேதுபதி!
“ உங்களுக்கு விளையாட விருப்பம் இல்லையா? கதவு திறக்கும் வெளியே போங்க..” என விஜய் சேதுபதி அரோராவை எச்சரித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 9
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. 20 போட்டியாளர்களுடன் ஆரம்பமான பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளது.
உள்ளே விளையாட சென்ற போட்டியாளர்கள் சக போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம் மக்கள் மத்தியில் பெரும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்க்கலாம் என பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சி தற்போது இப்படி மோசமான நிலையில் இருப்பது ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.
கடும் விவாதங்களுக்கு மத்தியில் நான்கு வாரங்கள் நிறைவடைந்துள்ளன. பிரவீன் காந்தி, அப்சரா ஆதிரை, கலையரசன் மற்றும் துஷார் ஆகியோர் இதுவரையில் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், 4 வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள் நுழைந்துள்ளனர்.

அரோராவை எச்சரித்த விஜய் சேதுபதி
இந்த நிலையில், நான்காவது வாரமான இன்றைய தினம் டபுள் எவிக்ஷன் எனக் கூறப்பட்டது.
இதன்படி, துஷார் மற்றும் பிரவீன் இருவரும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில் தொடர்ந்து பேசிய விஜய் சேதுபதி, இந்த வீட்டில் ஒரு நாள் இருந்து கடந்து வி்ட்டால் போதும் என்று யார் இருக்கிறார்? என கேட்க, அதற்கு பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்கள் அனைவரும் அரோரா என பதில் கொடுத்துள்ளனர்.

கடந்த வாரங்களில் துஷார் மற்றும் கம்ருதீன் உடன் இருந்து நாட்களை கடத்திய அரோரா இதுவரையில் வெளியேற்றப்படவில்லை என்பது ரசிகர்களின் ஆதங்கமாக இருக்கிறது. அத்துடன் வெளியே சென்ற துஷார் மேடையில் வைத்து, “ அரோரா என்னுடைய நண்பர் மாத்திரமே..” என்றும் கூறிச் சென்றுள்ளார்.
இவற்றையெல்லாம் பொறுமையாக பார்த்துக் கொண்டிருந்த விஜய் சேதுபதி இந்த வாரம்,“ அரோரா உங்களுக்கு விளையாட முடியவில்லை என்றால் பிக்பாஸிடம் சொல்லுங்க, கதவு திறக்கும் நீங்க வெளியே வந்திடலாம்..” என கடைசியாக எச்சரித்துள்ளார்.

துவங்கியிருக்கும் ஐந்தாம் வாரம் எப்படி அரோரா விளையாட போகிறார் என்பதை பொறுத்து அவரின் எவிக்ஷன் உள்ளது என இணையவாசிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |