முத்துக்குமரன் குறித்து வைரலாகும் வீடியோ... டைட்டில் வெற்றியை கலாய்த்த வி.ஜே பார்வதி!
பிக் பாஸ் தமிழ் 8-வது சீசனின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் தற்போது சர்ச்சையில் சிக்கியுளார். தன்னுடன் நெருக்கமாகப் பழகிவிட்டு, பின்னர் தன்னை ஏமாற்றிவிட்டதாகக் குற்றம்சாட்டி பெண் ஒருவர் வீடியோ வெளியிட்ட நிலையில், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றது.இந்நிலையில், முத்துக்குமரன் குறித்து பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

“நீங்க தானே...?” – பார்வதி வைத்த விமர்சனம்!
இந்நிலையில், பிக் பாஸ் தமிழ் 9-வது சீசனில் சர்ச்சைக்குரிய போட்டியாளராகப் பேசப்பட்டு, ரெட் கார்டு வழங்கப்பட்டு நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட பார்வதியும் தற்போது முத்துக்குமரனை விமர்சித்துப் பதிவிட்டுள்ளார்.
முத்துக்குமரனை நேரடியாகக் குறிப்பிட்டுப் பேசியுள்ள பார்வதி, பிக் பாஸ் நிகழ்ச்சியில் தங்களுக்குப் ரெட் கார்டு வழங்கப்படுவதற்கு முத்துக்குமரனும் ஒரு காரணமாக இருந்ததாகக் கூறி கிண்டல் செய்துள்ளார்.

அவர் தனது விமர்சனத்தில், “இந்த பிக் பாஸ் டைட்டில் வின்னர் தானே எங்களைப் பற்றிப் பேசி ரெட் கார்டு கொடுக்க வைத்தார். LOL! நல்ல தேர்வு.பிக் பாஸின் SCAM வின்னர்கள், நல்லவர்களாகக் காட்டிக்கொள்வதும் சூப்பர்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கெனவே முத்துக்குமரன் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில், தற்போது பார்வதியின் இந்த விமர்சனமும் கவனத்தை ஈர்த்துள்ளது.இதனால் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் இந்த விவகாரம் மேலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.