கொதிக்கும் தமிழர்கள்.....எல்லை மீறி கொச்சையாக நடக்கும் பிரபலங்கள்! சிம்பு அதிரடி காட்டுவாரா?
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக பல சர்ச்சையான விடயங்கள் நடந்து வருகிறது.
போட்டி என்பதனை தாண்டி, மாறி மாறி கருத்து மோதல்கள் மற்றும் தனிநபர் தாக்குதல்கள் என தொடர்ந்து இருப்பதாக ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
சில தினங்களுக்கு முன், நிரூப்பிடம் பேசும் அனிதா, கொச்சை வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார்.

இது தொடர்பான வீடியோக்கள், பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் அதிக விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. பல குடும்பத்தினர் கண்டு களிக்கும் நிகழ்ச்சியில் இப்படியான வார்த்தைகளை பயன்படுத்துவது அனைவருரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
அனிதா மற்றும் இல்லை ஜூலியை பார்த்து நிரூப்பும் கூட கொச்சை வார்த்தை பயன்படுத்தி இருந்தார். அடிதடி, மோதல் என மற்ற அனைத்தையும் சகித்துக் கொள்ளலாம்.

ஆனால், இது போன்ற கொச்சை வார்த்தைகள் பேசுவது பற்றி, சிம்பு மற்றும் பிக்பாஸ் குழுவினர் நிச்சயம் நடவடிக்கை எடுத்து, இம்மாதிரியான வார்த்தைகள் பயன்படுத்துவதை தவிர்க்க வழி செய்ய வேண்டும் என்றும் ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

குறிப்பாக தமிழ் ரசிகர்கள் அதிகம் பார்ப்பதால் போட்டியாளர்கள் நடந்து கொள்ளும் விதம் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜூலியை அந்த வார்த்தையை சொல்லி திட்டினாரா நிரூப் - கொதித்தெழுந்த ரசிகர்கள்