யாரும் இல்லாமல் தனியாக நிற்கிறேன்... பிக்பாஸ் தாமரை ஆவேசம்
Bigg Boss Thamarai: பிக் பாஸ் மூலம் பிரபலமான தாமரை செல்வி பலரிடம் பணத்தை வாங்கி ஏமாற்றியதாக கூறப்பட்ட புகாரில் தான் மன அழுத்தத்தில் இருப்பதாக பேசியுள்ளார்.
பிக் பாஸ் தாமரை செல்வி
பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் தாமரை செல்வி. இவர் பிக்பாஸ் வீட்டில் 92 நாட்கள் இருந்து விளையாடினார்.
இவர் திருவிழா மேடைகளில் நடனமாடும் கலைஞராக வந்த நிலையில், முதல் கணவரை பிரிந்து இரண்டாவது கணவர் பார்த்தசாரதி என்பவருடன் வாழ்ந்து வந்தார்.
பிக்பாஸிற்கு பின்பு சீரியல் மற்றும் சினிமாவில் பிஸியாக நடித்து வருகின்றார். மேலும் சமீப காலமாக எக்ஸ்போ போட்டும் சம்பாதித்து வருகின்றார்.
அவ்வாறு எக்ஸ்போ போடுவதாக கூறிய ஸ்டால் உரிமையாளர்களிடம் பணம் வாங்கியுள்ளார். ஆனால் அதனை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக பெண் ஒருவர் காணொளி வெளியிட்டிருந்தார்.

கதறும் தாமரை
இந்நிலையில் தாமரை பெண் ஒருவர் போட்ட பதிவிற்கு பதில் கொடுத்துள்ளார். ஆரம்பத்தில் தாமரையிடம் இன்ஸ்டா, முகநூல் இவற்றில் தான் பணம் கேட்டு வந்தனர். ஆனால் தாமரை எந்தவொரு விளக்கமும் கொடுக்கவில்லை.
பின்பு காணொளி ஒன்றினை வெளியிட்டு காணொளி போட்டால் பணம் தரமாட்டேன் என்ற விதத்தில் கூறியுள்ளார். இதனால் பொங்கி எழுந்த பெண் ஒருவர் பதிவு ஒன்றினை போட்டுள்ளார்.
அதில் 68 பேரிடம் 5000 ரூபாய் வீதம் பணம் வாங்கியுள்ளதாகவும், ஆகஸ்ட் மாதம் கொடுத்த பணம் இன்னும் திருப்பி தரவில்லை என்று கூறினார். இந்நிலையில் தாமரை தற்போது இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

அதாவது தான் அதிக மன அழுத்தத்தில் இருப்பதாகவும், அசிங்கமாக இருக்கின்றது... நான் உயிரை மாய்த்துக் கொண்டால் உங்களுக்கு சந்தோஷமா? யாரும் இல்லாமல் தனியாக நிற்கிறேன், ஏன் சாகடிக்கிறீங்க? என்று அழுதுள்ளார்.
ஏற்கனவே இவரது கணவர் பார்த்த சாரதி விவாகரத்து செய்வதாக அறிவித்த நிலையில், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சிக்கலில் காணப்படுகின்றார்.
தற்போது தனது நகையை விற்று உங்களது கடனை கட்டாயம் கொடுத்துவிடுவேன் என்றும் யாருடைய பணத்தை ஏமாற்ற மாட்டேன் என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |