சிறைக்கு செல்லும் கம்ருதீன்- பார்வதி... கெத்து காட்டும் கலையரசன்- சூடுபிடிக்கும் ஆட்டம்
பிக்பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளர்களாக இருக்கும் பார்வதி- கம்ருதீன் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டதை கலையரசன் கொண்டாடுகிறார்.
பிக்பாஸ் சீசன் 9
பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி பிரபல தொலைக்காட்சியில் ஆரம்பமாகி விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இந்த நிகழ்ச்சி வழக்கமான சீசன்களை விட இந்த சீசன் கொஞ்சம் சூடுபிடிப்பது குறைவாக உள்ளது.
சின்னத்திரை பிரபலங்களை விட இந்த சீசனில் சோசியல் மீடியா பிரபலங்கள் தான் அதிகமாக கலந்து கொண்டுள்ளனர். 20 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 9-ல் முதல் வார இறுதியில் நந்தினி மனநல ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது என காரணம் காட்டி வெளியேறினார்.

அதன் பின்னர் எவிக்ஷனில் குறைவான வாக்குகளை பெற்று பிரவீன் காந்தி, அப்சரா இருவரும் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
கொளுத்தி போட்ட கலையரசன்
இந்த நிலையில், இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களில் யார் இந்த வாரம் சரியாக விளையாடவில்லை என பிக்பாஸ் கொளுத்தி போடுகிறார். அதற்கு ஏற்றால் போன்று பிக்பாஸ் வீட்டிலுள்ள போட்டியாளர்களில் அதிகமானவர்கள் பார்வதியையும் கம்ருதீனையும் கூறுகிறார்கள்.

இவர்கள் இருவரையும் இன்றுடன் சிறைக்கு செல்ல வேண்டும் என பிக்பாஸ் கூறி விட்டார். அவர்கள் சிறைக்கு செல்லும் பொழுது கலையரசன் முகத்தில் அவ்வளவு சந்தோஷம் தெரிகிறது.
சண்டைக்கு காரணமாக இருந்தவர்களை விட்டு விட்டு எங்களை சிறைக்கு அனுப்புகிறார்கள் என பார்வதி புலம்பியப்படி சிறைக்குள் செல்கிறார்.
இப்படியாக இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |