புகழ் செய்த வேலை.. அசௌகரியத்தால் வெளியேறிய சௌர்ந்தர்யா- நிகழ்ச்சியிலும் இப்படியா?
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து சௌந்தர்யா திடீரென வெளியேறி உள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக உள்ளது.
கலக்கப்போவது யாரு
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று தான் கலக்கப்போவது யாரு சீசன் 10.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரன்னராக தேர்வான சௌந்தர்யா கலந்து கொண்டிருக்கிறார்.
அப்போது புகழ் செய்த செயல், சௌந்தர்யாவை கோபப்படுத்தியுள்ளது. இதனால் யாரும் எதிர்பார்க்காத வகையில் சௌந்தர்யா பாதி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக இருக்கும் பிரபலங்களை வைத்து அண்டகாகசம், கலக்கப்போவது யாரு, கம்பெனி, ஸ்டார் மியூசிக் ஆகிய நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 8-ல் பிரபலமான ரயான் மற்றும் சௌந்தர்யா இருவரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக இருக்கும் கலக்கப்போவது யாரு சீசன் 10 நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டுள்ளனர்.
நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய சௌந்தர்யா
அப்போது போட்டியாளராக கலந்து கொண்ட புகழ், சிறப்பு விருந்தினராக வந்த சௌந்தர்யாவிடம் காதல் ப்ரபோஸ் செய்வது போன்று நடிக்கிறார்.
அந்த நேரத்தில் புகழ் பேசுவதை பார்த்து நடுவர்களாக இருக்கும் மதுரை முத்து, அமுதவாணன் மற்றும் ராமர் மூவரும் நக்கலாக சிரிக்கிறார்கள்.
புகழின் நடிப்பால் கோபமடைந்த சௌந்தர்யா, “என்னை என்ன சொல்லி இந்த நிகழ்ச்சிக்கு கூப்பிட்டீங்க? சிறப்பு விருந்தினராக வந்தால் போதும் என்று கூப்பிட்டு என்ன பண்ணிட்டு இருக்கீங்க" என பேசி விட்டு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியுள்ளார்.
இந்த ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இது நிஜத்தில் சௌந்தர்யா புகழ் செய்த செயலால் கோபமாகி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டாரா அல்லது புகழை பிராங் செய்கிறார்களா? என்பது ஞாயிற்றுகிழமை எபிசோட்டில் தான் காட்டுவார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW