நிகழ்ச்சியில் வனிதாவை அசிங்கப்படுத்திய பெண் யார் தெரியுமா? வெளியானது உண்மைக் காரணம்
நடிகை வனிதா விஜயகுமார் திடீரென பிரபல ரிவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி உள்ளது.
நடிகை வனிதா பிக்பாஸ் மூலம் அதிக பிரபலமானதுடன், பல சர்ச்சைகளிலும் சிக்கி மீண்டு வந்தார். இந்நிலையில் அவர் பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியிலிருந்து திடீரென விலகியுள்ளார்.
நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில், தன்னை துன்புறுத்துவதாகவும், பல தகவல்களையும் வெளியிட்டிருந்தார். இதனை வைத்து அவரின் வெளியேற்றத்திற்கு பெண் ஒருவர் தான் காரணம் என்பது உறுதியாகியுள்ளது.
தற்போது குறித்த பெண் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஆம் குறித்த நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் ரம்யாகிருஷ்ணன் தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகின்றது.
ஏனெனில் வனிதா காளி வேடத்தில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மட்டுமின்றி, பல திரைப்பிரபலங்களையும் பிரமிக்க வைத்ததோடு, அனைவரும் அவரைப் பாராட்டி கருத்துக்களை பதிவிட்டிருந்தனர்.
இவ்வாறு அதிகமான நேரம் செலவழித்து அவர் போட்டு வந்த மேக்கப்பினை சிலர் கலாய்க்கவும் செய்தனர். இந்நிலையில் குறித்த நிகழ்ச்ச்யில் ரம்யாகிருஷ்ணன் வனிதாவிற்கு 10க்கு 1 மதிப்பெண் மட்டுமே கொடுத்ததாகவும், இதனாலேயே வனிதா வெளியேறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
அதுமட்டுமில்லாமல் அவரைப் பிடிக்காத ரசிகர்கள் அவரைத் திட்டித் தீர்த்தும் வருகின்றனர். வனிதாவின் அறிக்கைக்கு “உனக்கு ஆடுவதற்கு வரலைனு சொல்லு” என்று சரமாரியாக கருத்து பதிவிட்டுள்ளனர்.

எதையும் காதில் போட்டுக்கொள்ளாத நடிகை வனிதா மீண்டும் தனது பயணத்தினை தொடங்கியுள்ளார். ஆம் குறித்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினாலும், அந்நிகழ்ச்சியில் அவர் போட்டிருந்த மேக்கப் குறித்து காணொளி வெளியிடவுள்ளதாக தனது இன்ஸ்டாகிராமில் போட்டுள்ளார்.
இதற்கு ரசிகர் ஒருவர் “நீயே அதுல விலகிட்டியே. ஆயிரம் விமர்சனங்கள் வெச்சிட்டியே.... அப்புறம் எதுக்கு அதை வச்சு காசு பார்க்கனும்“ என்று கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
[I5TNYS ]