மூட்டை தூக்கும் அமீரின் அண்ணன்! ஷாக்கில் கதறி அழுத பாவனி - பரபரப்புடன் முடிந்த BB Jodigal 2 Grand Finale
பிபி ஜோடிகள் சீசன் 2 நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே நிகழ்ச்சிக்கு அமீரின் அண்ணன் வருகைத்தந்துள்ளார்.
இது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2வின் கிராண்ட் ஃபினாலே சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. அதன் ஒளிபரப்பு வரும் செப்டம்பர் 4ம் தேதி விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.

BB Jodigal 2 Grand Finale இல் காத்திக்கும் இன்ப அதிர்ச்சி
பிபி 2 ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர்-பாவனி வெற்றி பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.
அதே சமயம் அம்மா இறந்த பிறகு பிரிந்து வந்த அண்ணனை முதல் முறை அமீர் அறிமுகப்படுத்தியுள்ளார்.
அமீரின் அண்ணன் தண்னை விட சிறந்த நடன கலைஞர் ஆனால் தற்போது அவர் மூட்டை தூக்குவதாக கூறி அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்துள்ளார். இதனை கேட்டு பாவனி முதல் அரங்கத்தில் இருந்த அனைவரும் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.
இந்த ப்ரோமோ காட்சிகளை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.