தினேஷ்-ரக்ஷிதா பிரிவிற்கு இதுதான் காரணமா? ரக்ஷிதாவே போட்ட பதிவு... அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிக் பாஸ் 7ம் சீசனில் கலந்துகொண்ட நடிகர் தினேஷ் நேற்று நடந்த பைனலில் நான்காம் இடம் பிடித்தார்.
அவர் நடிகை ரக்ஷிதாவை பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் பிக் பாஸுக்கு பிறகு அதில் மாற்றம் வரலாம் என அவர் நம்பிக்கையுடன் பேசி வந்தார்.
ஆனால் ரக்ஷிதா அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்று உறுதியாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வந்தார்.
காரணம் இதுதானா?
நடிகர் தினேஷ், சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 7 போட்டியில் முக்கிய போட்டியாளராக களமிறங்கினார். கடந்த அக்டோபர் 1ஆம் தேதி ஆரம்பித்த பிக்பாஸ் 7 போட்டியில், 22 போட்டியாளர்கள் களமிறங்கினர்.
இந்த போட்டி தொடங்கிய 28 நாட்கள் கழித்து இதனுள் வைல்டு கார்டு போட்டியாளராக களமிறங்கியவர், தினேஷ். ஆரம்பத்தில் இவரை ஏற்றுக்காெள்ள மறுத்த பிக்பாஸ் போட்டியாளர்கள், அடுத்தடுத்த வாரங்களில் இவருக்கு டஃப் கொடுத்து விளையாடினர்.
பிக்பாஸ் போட்டிக்குள் தினேஷ் நுழைய காரணம்.. பிக்பாஸ் 7 போட்டியாளர்கள் அனைவரிடமுமே எதற்காக இந்த போட்டிக்குள் நுழைந்தீர்கள் என்று கேட்கப்பட்டது. ஒவ்வொருவர் ஒவ்வொரு காரணம் கூற, தினேஷ் கூறிய காரணம் பலரையும் ஈர்த்தது.
இவர், தன்னை விட்டு பிரிந்து போன ஒருவரை மகிழ்விப்பதற்காகவும், அவரிடம் வெற்றியுடன் நிற்க வேண்டும் என்பதற்காகவும் இப்போட்டிக்குள் நுழைவதாக கூறினார்.
பிக்பாஸ் போட்டியில் வென்றால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு, உடனே பெங்களூருவிற்கு சென்று அவரை சந்தித்து பேசுவேன் என்று கூறினார். ரச்சிதா பெங்களூருவில் தங்கியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரக்ஷிதாவின் பதிவு
தினேஷ், பிக்பாஸ் சீசன் 7ல் இருந்த ஒவ்வொரு நாளின் போதும் தான் போட்டி முடிந்தவுடன் கண்டிப்பாக ரச்சிதாவை சந்திப்பதாக கூறினார். மேலும் முடிந்து போன திருமண வாழ்க்கையை மீண்டும் மகிழ்ச்சியாக மாற்ற வேண்டும் என்றும் கூறினார்.
இவர், ஒவ்வொரு முறை ரக்ஷிதா குறித்து மறைமுகமாக பேசிய போதும், ரச்சிதா தனது இன்ஸ்டா ஸ்டோரி மூலம் தினேஷை தாக்கும் வகையிலேயே பல பதிவுகளை வெளியிட்டு வந்திருந்தார். அப்படி ஒரு எபிசோடில் அவர் ரச்சிதாகவை போட்டி முடிந்தவுடன் பார்ப்பதாக உறுதியாக தெரிவித்தார்.
இதற்கு ரக்ஷிதா, நேர்கொண்ட பார்வை படத்தில் வரும் ஒரு டைலாக்கை ‘புரிஞ்சா சரி.. நோ மீன்ஸ் நோ’ என குறிப்பிட்டு இன்ஸ்டாவில் பதிவிட்டு இருக்கிறார் .
இதை பார்த்த ரசிகர்கள் தினேஷ் அந்த அளவுக்கு ரக்ஷிதாவிடம் நடந்துகொண்டாரா என ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். குறித்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |