எலிமினேஷனில் இருந்து தப்பிக் கொள்வதற்காக நாடகமாடும் போட்டியாளர்! இந்த வாரம் வெளியேறுவாரா?
பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் போட்டியாளர்களுக்கு புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி
மக்களால் அதிகம் விரும்பி பார்க்கபடும் நிகழ்ச்சிகளில் பிக் பாஸ் முக்கிய இடத்தை பிடிக்கிறது. இதன்படி, பிக் பாஸ் சீசன் 6 கடந்த அக்டோபர் 9 அம் திகதி மிக விறுவிறுப்பாக ஆரம்பிக்கப்பட்டது.
மற்றைய சீசன்களை விட இந்த சீசன் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை. இதனால் இந்த நிகழ்ச்சியை விறுவிறுப்பாக மாற்ற கமலும் வாரம் வாரம் புதிய டாஸ்க்களை கொடுப்பார்.
இருந்தபோதிலும் கடந்த வாரம் கொடுக்கப்பட்ட டாஸ்க்கிலே போட்டியாளர்கள் முறையாக பங்குபற்றியதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் பிக் பாஸின் டிஆர்பி ரேட்டிங்கும் சற்று அதிகமாக காணப்பட்டது.
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு சுமார் 8 போட்டியாளர்கள் இதுவரைக்கும் வெளியேறியுள்ளார்கள்.
புதிய டாஸ்க்
இதனை தொடர்ந்து இந்த வாரம் போட்டியாளர்களுக்கு நகைச்சுவை செய்து பண சம்பாரிக்கும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் ஆயிஷாவும் ஏடிகேவும் பிக் பாஸ் வீட்டில் பட்டைய கிழப்பி வருகிறார்கள்.
இதன்படி, கழிவறைக்குள் செல்ல அனுமதி கேட்கும் ஏடிகேவை பண கேட்டு ஆயிஷா மிரட்டுகிறார்.
மேலும் இந்த வாரம் வெளியேறப்போகும் போட்டியாளராக நாமினேஷனுக்கு சென்ற ஆயிஷா, இந்த வார டாஸ்க்கில் தப்பிப்பார் என நம்பப்படுகிறது.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.