அசீமை ரெட் கார்ட் கொடுத்த வெளியேற்ற சதிதிட்டம்.. முகத்திற்கு முகம் கலாய்த்துக் கொள்ளும் போட்டியாளர்கள்!
பிக் பாஸ் வீட்டின் இந்த வார தலைவராக இருக்கும் அசீம் "ஒரு அட்டகத்தி வீரர்" என விக்ரமன் கூறியுள்ளார்.
விறுவிறுப்பான காட்சி
பிக் பாஸ் சீசன் 6 ஆரம்பித்து தற்போது 50 நாட்களை தாண்டியுள்ளது. .இதில் தற்போது வரைக்கும் சுமார் 7 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பிக்பாஸ் வீடு இதுவரை காலங்களில் விறுவிறுப்பாக காணப்படாவிட்டாலும் தற்போது கொடுக்கப்பட்ட டாஸ்க் இவை அனைத்தையும் முறியடித்துள்ளது.
மேலும் இந்த வாரம் விக்ரமன் மற்றும் அமுதவாணனின் விளையாட்டு சற்று வித்தியாசமாகவே காணப்பட்டது.
விக்ரமன் உண்மையான “வேடுவர் குல வீரர் போலவே” பிக் பாஸ் வீட்டில் நடனமாடியுள்ளார். இவரின் நடன வீடியோக்கள் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் விக்ரமனை சரமாரியாக கலாய்த்து கருத்துக்களை பதிவு செய்துள்ளனர்.
பரபரப்பான ப்ரோமோ
இந்நிலையில் சற்றுமுன் வெளியான ப்ரோமோவில் விக்ரமன், “அசீமை ஒரு அட்டகத்தி வீரர்” என கலாய்த்து பேசியுள்ளார்.
மேலும் பேசிட்டு இருக்கும் போது அமுதவாணனின் மீது கை வைத்தது தப்பு என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும் பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்கள் அனைவரும் அடுத்த வாரம் ரெட் கார்ட் கொடுத்த வெளியே அனுப்ப வேண்டும் என்று சதி திட்டம் தீட்டி வருகிறார்கள்.
இவர்களின் திட்டம் நிறைவேறுமா என்பது சற்று பொருத்திருந்து தான பார்க்க வேண்டும்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.